பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆடசியில் பட்டிமண்டப விளைச்சல் T 291

புதுமைப் புலக்கொள்கை, மொழியை அடித்தள மாகக் கொண்டது . இவ்வாய்வும் மொழிக்கூறுகளையும், தமிழ்மொழி வேர்ச்சொல், அதன் வழிச்சொல், பெயர் களையும் அடித்தளங்களாகக் கொண்டதாயிற்று.

தொல்காப்பியர் காட்டிய நூல்நெறியின்படி இவ் வாய்வுநூல் அடியொற்றியது . தொல்காப்பியர் சொல் லதிகாரத்தின் புறநடையாக, ஒரு நூற்பாவில் நூல் நெறியைக் கூறினார். அந்நூற்பா இது :

“செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் மெய்பெறக் கிளந்த கிளவி எல்லாம் பல்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டர்’

இதில் நூல் நெறி பிழையாது செய்வதற்குத் தமிழ்ச் சொல்லை வேறு வேறு வகைகளில் கண்டு அறிய வேண்டும் என்றார். -

இதன்படியும், அவர் குறித்த செய்யுள் நூல் சொற்களும், வழக்குச் சொற்களும் இரண்டின் சொற் றொடர்களும் அவற்றின் பொருளின்படி சான்றாகக் கொள்ளப்பட்டன. அஃதாவது இலக்கண இலக்கிய நூல் கள் வழங்கிய சொற்களும் பொருள்களும் சான்றாகக்

கொள்ளப்பட்டன.

இவ்வாறான செய்யுள்களுடன்