பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆய்வுப் பதிவுகளின் தொகுப்பு

கருத்துப் போரிட அறைகூவலாகப் பொது இடத்தில் கருத்துபொறித்த கொடி பிடிக்கப்பட்டது. புலமைச் சான்றோர் பாடல்களை ஆயவும், நூல்கள் எழுதவும், அரங்கேற்றவும் களமாகப் பட்டி மண்டபம் இருந்தது. - அரங்கேற்றத்தின்போது நேர்ந்த தடைவிடைகளால் கருத்துப்போர் எழுந்தமையால் கருத்துப்போர் பட்டி மண்டபமாயிற்று.

அறை கூவப்பட்டால் /9 ஏற்கப்பெற்று நிகழ்ச்சியாகும் வரை பட்டிமண்டபத்தில் வேறு பணிகள் நிறுத்தப்படுவதன் அறிகுறியாகப் பட்டிமண்டப வாயில் அடைக்கப்பட்டது. கருத்துப்போர் பாங்காக நிகழ்ந்து ஏற்கப்பட்ட முடிவு எதிர்த்தோரால் ஏற்கப்பட்டது. கருத்துப்போர் தலைவராகவோ நடுவராகவோ அரசன் அமைந்ததும் உண்டு அரசவையிலும் கருத்துப்போர்ப் பட்டிமண்டபம் இருந்தது. நகர்ப் பொது விழாக்களில் பட்டி மண்டபத்தார் கருத்துப்போரிடஅழைக்கப்பட்டனர்.

கருத்துப்போரில் தோற்றவரைக் கடுமையாக ஒறுக்கும் செயல் தோன்றியது. -