பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 T பட்டி மண்டப வரலாறு

பாடியவர். இப்பெயரையும் நல்லருள்புரியும் இறைவன் என்று கடவுளாகக் கொள்ளவில்லை. இவர் புலவர் பட்டியலைவிட்டுநகர்த்தப்படவில்லை.

எனவே, இறையனாரை இறைவனாராக- கடவுளாகக் கொண்டமை வேண்டுமென்றே செய்யப்பெற்ற மயக்கச்

செயலேயாகும்.

இதுபோன்றே"இறையனார் களவியல்’ என்னும் நூல் பற்றிய கதையுமாகும். இதன் நூற்பாக்கள் மதுரைச் சொக்கநாதக் கடவுளால் பாண்டிய மன்னனது கவலை தீர்க்கப் பாடப்பட்டுப் பீடத்தின்கீழ் இடப்பட்டனவாகக் கதை கட்டப்பட்டது. இறையனார் என்னும் சொல் லமைப்பு கொண்டு களவியலும் ஒரு புலவரால் பாடப் பெற்றதேயாகும் அதற்கொரு தனிப்பெருமை ஏற்ற, கதை உருவாகியுள்ளது.

மற்றொருபெயர் பேராலவாயர்’ என்பது. ஆலவாய்’ என்றால் மதுரை பேராலவாயர்’ என்பது பேரருள் கொண்ட மதுரைக் கடவுள் என்னும் அடிப்படையில் திருவிளையாடற் புராணத்தில் மதுரைக் கடவுள் பேராலவாயர்’ என்று பெயர் குறிக்கப்பட்டுள்ளார் இப் பெயரில் ஒரு புலவர் இருந்தார். இவரும் சங்கப்புலவர் ஏழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகன் காலத்தில் வாழ்ந்து அவனைப் பாடியுள்ளார். இவர் பெயரையும் கடவுளாகவே

கொண்டு பேகனுக்கும் அவனைப் பிரித்திருந்த கண்ணகிக்