பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 s பட்டி மண்டப வரலாறு

  • அரசவையில் ஒருகருத்துஎழுப்புதல்,
  • அதில் குற்றம் கூறுதல்
  • அதன் தொடர்பில் (55துப்போர் நிகழ்தல் * கருத்துப்போராளர்விடாப்பிடியாகப் பேசுதல்
  • முடிவில் குற்றங்கூறி மறுத்தவரை ஒறுத்தல்

(தண்டித்தல்) .

நக்கீரர் குயக்கோடன் கருத்துப்போரில் புதிதாகக் காணப்பட்ட விடாப்பிடியும், ஒறுத்தலும் இங்கும் இடம் பெற்றன . இரண்டுமே கடுமையான ஒருதலைச்சார்பாகச் சாகடிக்கும் ஒறுத்தலே. இரண்டிலும் அருளும் இடம் பெற்றது . நக்கீரன் தருமி கதையின் பட்டிமண்டப நடை முறைகொண்டு பார்த்தால் புராண வழிப்புகுந்ததொரு தடையால் பட்டிமண்டப வரலாற்றின் இரண்டாவது கல்லுக்கு சார்பானதாகின்றது.

மற்றொன்றையும் கருத வேண்டும்.

மூலமாக உண்மையில் ஒருவர் பாடிய பாடலை வைத்து எழுந்த கற்பனைக் கதை கொண்டு அதில் வந்த உண்மையற்ற நிகழ்ச்சிகளைப் பட்டி மண்டப வரலாற் றிற்குச் சான்றாகக் கொள்ளலாமா? உண்மை நிகழ்வல்வாக் கற்பனைக் கதைகளைச் சான்றாகக் கொள்ள முடியாது; கூடாது . ஆனால் அவற்றில் கதையன்றிக் கூறப்படும்