பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 | பட்டி மண்டப வரலாறு

“நான்மறை என்பன, தயித்திரியம், தலவகாரம், பெளடிகம், சாமம் . இனி இருக்கும் எசிரும் சாமமும் அதர்வணமும் என்பாரும் உளர். அதுபொருந்தாது. இவர் (தொல்காப்பியர்) இந்நூல் (தொல்காப்பியம்) செய்த பின்னர் வேதவியாசர் சில்வாழ்நாட் பல்பிணிச்சிற்றறி வினோர் உணர்தற்கு நான்கு கூறாகச் செய்தார் என்]! எழுதினார்.

வடமொழியிலும் வல்லுநரும், வடமொழி நான் மறைகளை அறிந்தவரும் பாரத்துவாசகோத்திரத்து ஆரிய இனத்தவருமாகிய நச்சினார்க்கினியர் கருத்து இது.

இதன்படி தொல்காப்பியம் வடமொழி நான் மறைக்கு முந்தியது. எனவே, வடமொழி நான்மறைகளின் காலத்தைக் கொண்டும் தொல்காப்பியக் காலத்தைக் கணிக்கலாம்.

நான்மறையும், தொல்காப்பியமும்

நான்மறை அநாதி அஃதாவது அந் ஆதி ஆதி யில்லாதது தோன்றிய காலம் என்று ஒன்று காண முடியாதது என்றனர் . அது பொருந்தாத கதையாகிப் போயிற்று. வடமொழி வல்லுநர்களும், வரலாற்றுவல்லுநர் களும், மொழியறிஞர்களும் நான்மறைக் காலத்தைக் கணித் துள்ளனர்.

நான்மறை ஒருவரால் கூறப்பட்டதன்று முனிவர் களால் கூறப்பட்டுத் தொகையானது பல நூறு ஆண்டு