பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் 23

களாக முனிவர்கள் பலரால் அவ்வப்போது பாடிப் பாடிச் சேர்க்கப்பட்டது . வரலாற்று வல்லுநர்கள் நான்மறைக் காலத்தின் மேல் முன் எல்லையாக கி. மு. 2500 முதல் கி மு 1500-இற்கு உட்பட்ட காலத்தது என்று கணித் துள்ளனர். -

வடமொழி இலக்கண நூலாசிரியரான பாணினி ‘அட்டாத்தியாயி’ என்றொரு நூலை எழுதினார். அதற்குப் பதஞ்சலி முனிவர் அகல உரை எழுதியுள்ளார். பதஞ்சலி யின் காலம் கி. மு. 150 என்று வரலாற்றாசிரியர்கள் கணித் துள்ளனர். அக்கணிப்பு கொண்டு பாணினி பதஞ்சலிக்கு 900 ஆண்டுகள் முந்தியவர் என்பதும் காணப்பட்டது. பாணினிக்கு 400 ஆண்டுகள் முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது மொழியறிஞர்கள் கணிப்பு மறைமலையடி களாரும் இதன்படி தொல்காப்பியர் காலம் கி மு 1500 என்றார். பாவாணரும் இக்கருத்தே தந்தார். -

எனவே, தொல்காப்பியம் இன்றைக்கு (1994) ஏறத் தாழ 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதற்குப் பாயிரம் தந்த பனம்பாரனாரும் அக்காலத்தவர் . எனவே பணம் பாரனம் அக்காலத்தது ,

மன்னிய அவையிடை வெல்லுதல் என்னும் கருத்துப்போர் பட்டிமண்டபக் கருத்து 3500 ஆண்டுகட்கு முற்பட்டது . எனவே, 3500 ஆண்டுக்கு முன்னரே பட்டி மண்டப வரலாற்றின் ஊற்றுக்கண் திறந்துவிட்டது என்றாகும்.