பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 25

வெல்லுதலைக் குறிக்கிறது . இஃதும் கருத்துப்போரின் அடையாளமே.

சொல்லும் சொல்லுக்குப் பல அடைமொழிகளைக்

கொடுக்கும் திருவள்ளுவர்,

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்,அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

என்று “வெல்லுஞ் சொல்” அமைத்தார் வெல்லும் இந்தச் சொல் பட்டிமண்டபச் சொற்போரில் வெற்றிபெறுதலை யும் குறிக்கிறது.

போர்களில் சொற்போர்

இகல்வெல்லல் என்பதைப் பொதுவில்நோக்கினால் போரில் வெற்றி பெறல் என்று குறிக்கும் . இது சொல் வன்மை அதிகாரத்தில் அமைந்துள்ளமையால் சொற்போர் வெற்றியைக் குறிக்கும்.

போரில் பலவகை உண்டு. அவற்றில் வெற்றி பெறுதலைத் தொல்காப்பியம் புறப்பொருள் இலக்கணத் தால் வாகை என்றது. வாகைத் திணையைப் பாகுபடுத்தும் தொல்காப்பியர்,

“பால் அறிமரபின் பொருநர்க் கண்ணும்’ என்றொரு வகைப்பாட்டைக் குறித்தார். இதற்கு உரை விரித்தநச்சர்,