பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 | பட்டி மண்டப வரலாறு

தாந்தாம் அறியும் இலக்கணங்களிலே போர்

செய்வாரிடத்துக் (வெற்றிக்) கூறுபாடு” - என்று

எழுதி அதனை விளக்குபவர்,

“சொல்லானும்பாட்டானும் கூத்தானும், மல்லானும்,

குதானும் பிறவற்றானும் வேறலாம்’ (வெற்றிகொள்ள லாம்) என்றார்.

இதில் சொல்லானும் . . . . . . . வேறலாம்” என்றது. சொற்போரில் வெற்றியைக் குறிக்கிறது . சொல்லானும் என்பதை முதலில் வைத்து அதன் அருமையைப் புலப் படுத்தியுள்ளார். இப்பொருளை அடக்கித் தொல்காப்பியம் சொற்போரைக் குறிப்பிடுவது போன்று திருவள்ளுவர் “வாள், வில் ஏந்திப் போர் செய்பவரும் வீரரே, சொல் லேந்திச் சொற்போர் செய்பவரும் வீரரே என்றும், வில் வீரர் எதிர்ப்பைவிடச் சொல்வீரர் எதிர்ப்பு வலிமை யானது’ என்றும்

“வில்லேர் உழவர் பகைகொளிலும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை’

என்று உழவராக உருவகப்படுத்தியுள்ளார் . மேலும் அவரே, போரின்,

“பகையகத்துச் சாவார் எளியர்” என்றும்

- & - ... 14 - - அவையகத்து அஞ்சாதவர் அரியர்"-” என்றும்

அவையகப் போரின் அருமையைக் குறித்தார்.