பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் s 27

இத்தொடர்பிலேயே

நூலைக் கற்றவன் அவையில் சொற்போரிட அஞ்சினால் அவன் கற்ற நூலறிவுக்குப் போர்த் களத்தில் பேடியின் கையிலுள்ள வாளை’

உவமையாக்கினார்.

இவற்றையெல்லாம் கொண்டு சங்க காலத்தில் சொற்போரும் அதற்குரிய பட்டிமண்டபமும் இருந்தன என்று கொள்ள வேண்டும்.

நாவலம்

‘நாநலம் என்னும் சொல்லைத் திருவள்ளுவர் வழங்கியமைபோன்று நாவலம்’ என்னும் சொல்லை இளங்கோவடிகள் தம் சிலப்பதிகாரத்தில் வழங்கி யுள்ளார் . இதன் பொருள் நாவன்மை அத்துடன் ‘வலம்’ என்னும் சொல் வெற்றியையும் குறிக்குமாதலால் நாவால் பெறும் வெற்றி என்றும் பொருள் பெறும் இளங்கோ வடிகள் கையாண்டுள்ள நாவலம்’ என்னும் சொல் தொடர்பில் ஒரு நிகழ்ச்சி அறிமுகமாகிறது . அந்நிகழ்ச்சி தொல்காப்பியம் வகுத்த இலக்கணம் ஒன்றையும் நினைவுபடுத்துகிறது. வாகை வகைகளில் பார்ப்பன வாகை என்பது ஒரு துறை பார்ப்பன அறிஞன் தன் நான்மறைக் கருத்தை நிலைநாட்டி வென்றால் அவ்வெற்றி ‘பார்ப்பன வாகை யாகும்.