பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 29

இவ்வாறு பார்ப்பன வாகை சூடிய பராசரன் சேர மன்னனிடம் பரிசும் வரிசையும் பெற்றுத் திரும்பினான். இதனை இளங்கோவடிகள் மதுராபதித் தெய்வம் கூறுவ தாக அமைத்துள்ளார்.

‘நாவலம் கொண்டு நண்ணார் ஒட்டி” என்னும் அடி தன் கருத்தோடு நண்ணிவராத மாற்றுக் கருத்துடையவரை நண்ணார் - (மாற்றார்) என்று குறிக்கின்றது . கருத்து மாற்றாரை நாவலமாம் சொல்வன்மை கொண்டு தோற் கடித்து ஒட்டினான் . இவற்றால் நான்மறைக் கருத்துச் சொற்போர் நிகழ்ந்தது குறிக்கப்பெறுகிறது.

பராசரனுக்கு வடபுல முன்னோடி

சொற்போர் வரலாற்றில் இங்கொரு புதுச்சேர்க்கை இணைகிறது. கருத்தை நிலைநாட்டச் சொற்போர் நிகழ்ந்த நிகழ்ச்சியுடன் பரிசும் வரிசையும் கருதிச் சொற்போரை அதற்குக் கருவியாகக் கொண்டு முனைந்ததை இச்செய்தி தருகின்றது . இது கருத்துப் பயன் இன்றி, பரிசுப் பயன் கருதிய தன்னலப் பாங்குடையது கருத்துப் பயனுடைய சங்கப் பாங்குடன் இத்தன்னலப் பாங்கு வடவர் மரபால் புகுந்ததாகும். ஆம் இவ்வாறு தன்னலம் நாடிப் போவதை கி. மு. 700 இல் வடபுலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியால், அறிய முடிகின்றது.

நான்மறை வித்தகனாகிய சத்திரிய பிரவாகன் என்பான் பிரமவாதம் என்றொரு புதுக்கோட்பாட்டை