பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 [...] பட்டி மண்டப வரலாறு

வடித்தான். இதில் பார்ப்பனராம் பிராமணர் தேர்ந்தனர். குருகுலத்து யக்ஞவல்கீயன் என்பான் இவ்வாதத்தில் வல்லவன் ஆனான். வடபுல விதேக நாட்டுப் பெருமன்னன் சனகன் மறைக்கலைகளில் தேர்ந்தவன் தன் அவையில் இந்தப்பிரமவாத அவையைக்கூட்டினான். இந்த அவையில், பக்ஞவல்கீயனும் பிரமவாதி கார்க்கி என்னும் பெண்ணும் வாதிட்டனர் . கார்க்கி தோற்கடிக்கப்பட்டாள் வென்ற யக்ஞவல்கீயனுக்குச் சனகன் 1000 கணக்கில் ஆவினம், குதிரைகளைப் பரிசாக வழங்கினான் பொன்னும் பொரு ளும் வழங்கினான், அவற்றுடன் அடிமைப் பெண்களையும் வழங்கினான் பெற்ற வல்கீயன் 1000 கணக்கில் கிடைத்த விலங்குப் பரிசினைப் பல கல் தொலைவிலிருந்து தன் பாஞ்சால நாட்டிற்குக் கொண்டுவர இயலாமல் அங்கிருந்த பார்ப்பனருக்கு வழங்கிவிட்டான் . ஆனால், பொன்னை யும், அணிமணிகளையும் கொணர்ந்தான் . அவற்றுடன் இளங்கன்னியராகிய அடிமைப் பெண்களை ஒருவர் விடாமல் அரவணைத்துக் கொண்டு வந்தான் வல்கியன் அடிமைப்பெண்களைக் காம விளையாட்டில் பயன்கொள் வதில் பேரார்வமுடையவன்’ என்று பெயர் பெற்றவன்.

இந்நிகழ்ச்சி கொண்டு கருத்தை நிலைநாட்ட எழுந்த கருத்துப்போர் பரிசையும் பெண்களையும் பெற நாடிப் பயணம் கொள்ளும் நல்ல குறிக்கோளற்ற நோக்கத்திற்குக் கருவியானதை உணரலாம் அவ்வழி வந்த வலவைப் பார்ப்பான் பராசரன் தமிழ் நிலத்தில் இதற்கு முன்னரே அதனைக் கையாண்டான்.