பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பட்டி மண்டப வரலாறு

- என்கிறது மனுநூல் வேதமே சுருதி, (அறத்தின் துணிவு தான்), சுமிருதி இவற்றை வாதிட்டுச் சோதித்து அறிய முயலக்கூடாது” (-மறு2-7). இவற்றைக்கல்வி நூலறிவாலும் வாதத் திறமையாலும் சோதித்து அவமதிப்பவன் எவனா யினும் அவன் நாத்திகனாவான் (மறு 2 - 8) இவற்றையும் மீறி நான்மறையை ஒதுக்கிய செயலாம் பிரமவாதம் நான்

மறையாளன் யக்ஞவல்கியனால் நிகழ்த்தப்பட்டது . இவ்

வாறான வல்லடி வழக்கு தமிழ் மண்ணில் புகுந்தது.

இது தமிழகப் பட்டி மண்டப வரலாற்றிலே

மூன்றாவது அளவுக்கல்.


மூன்று கற்கள்

கருத்தை நாட்ட எழுந்து கருத்தை நாட்டியதும்,

தோற்றவர் அக்கருத்தை ஏற்றதும் பெருந்தன்மைப்

பாங்கு. இதுதான் சங்கப் பாங்கு. இப்பெருந்தன்மைச் சங்கப்பாங்குபட்டிமண்டப வரலாற்றில் முதற்கல்.

நக்கீரர், தருமி, குயக்கொண்டான் தொடர்பில் அமைந்தவை நிகழாத கற்பனையாக அமையினும் கருத்துப்போர் நிகழ்ச்சி நடப்புகளில் இருந்தவற்றை இக்கதையமைப்பில் ஏற்றிக் கூறியதாகக் கொள்ள லாம். தோற்றவர்க்குக் கடுந்தண்டனை தந்தமை. பெருந்தன்மையை நழுவவிட்ட செயல் இது பட்டி மண்டப வரலாற்றில் இரண்டாவது கல் . இதனால் சங்கப் பாங்கு ஒர் அசைவு பெற்றதாயிற்று.