பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் 35

மதுரை நகரில் கடைவீதியின் ஆரவாரத்தைமாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விவரித்தார். இந்த ஆரவாரத்திற்கு உவமையாக, சேரமான் கோக்கோதை மார்பனுடைய ஆரவாரம் மிக்க அறிவால் அரசவையைக் கீழ்வருமாறு பாடினார் : -

சேர மன்னருடைய,

“பெருநாள் இருக்கை விழுமியோர் குழிஇ விழைவு கொள் கம்பலை’

இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்,

“பெரிய நாளோலக்க இருப்பிலே

எல்லாக் கலைகளையும் உணர்ந்த

சீரியோர் திரண்டு அவன் (சேர மன்னன்)

கேட்ப, தருக்கங்களைக் கூறி விரும்புதல்

கொண்ட ஆரவாரம்” என்றார். இதன்படி அரசவை, கருத்துப்போர் (தருக்கம்) நிகழும் களமாகவும் அமைந்ததை அறியலாம்.

நச்சினார்க்கினியர் இந்த உரைக்கு மேலும் ஒரு விளக்கம் தந்தார் :

“பல சமயத்தோரும் தம்மிற்றாம்

மாறுபட்டுக் கூறுந் தருக்கத்தைச்

சேரக் கூறக்கேட்டிருக்கின்ற

கம்பலை ஆரவாரம்"