பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 37


என்று கருதியமையேயாகும் அப்பொழுது யான் கூறிய ஒன்றை இங்குக் குறிக்கலாம் :

மன்னர் திறை கொடுப்பதென்பது வெறும் அடை யாளம் அன்று பெறுவோனது பெருமைக்கேற்பப் பெரு மதிப்புடைய பொருளை வழங்குவது மற்றும், இவை மூன்றும் இருந்த மண்டபம் அரசன் அமரும் சித்திர மண்டபமாக - திருவோலக்க மண்டபமாகக் கூறப்பட் டுள்ளன . மண்டபம் பெரிய பரந்த மண்டபம் அதில் நுழைவாயிலில் கலைச் சிறப்புடைய தோரணவாயிலும், மன்னன் செவிகொள்வதற்கேற்பப் புலவர் அமரும் மண்ட பமும், மன்னன் அமரும் ஆட்சிக் கட்டிலின் மேல் - வெண் கொற்றக்குடைக்கு மேலே முத்தாலாகிய பந்தலும் அமைதல் கூடியதே. அதுதான் அவன் வெற்றியைக் காட்டவும் உரியதாகும்.’

எனவே, அரசவையிலேயே பட்டிமண்டப நிகழ்ச்சி நிகழ்ந்தது. அது நிகழ்ச்சிக் களமாக இருந்தது.

அரசவை மட்டுமன்றிப் புலவர்கள் குழுமி நூல்களை ஆராயும் அல்லது அரங்கேற்றும் தனி அவைகளும் பட்டிமண்டபக் களங்களாகும் “கல்வி பயில்களம் பட்டி மண்டபம்” என்று பிங்கலம் (663) இனங்காட்டுகிறது . “கல்விபயில்” என்றது கொள்ளத்தக்கது. கல்விபயில் களம் என்று அவைக்களமாகக் குறிக்கப்பட்டதும் ஒரு பதிவு ஆகும்.