பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 39

அவையின் நடைமுறை ஒழுங்குகளையும், அவை யோரின் அறிவுத்திறனையும், பண்பு நலன்களையும் கொண்டே அது சிறப்படையும் நேரும் குறைகளால் சிறப்படையாது, தாழ்வையே பெறும்.

அவையின் இலக்கணத்தைப் பண்டைய நூல்கள் காட்டின. அவற்றுள் அவையோரின் அறிவும் பண்பும் தழுவிய குணங்கள் காட்டப்பட்டன. அவ்வாறு காட்டப் பட்டவற்றுள் கருத்து, மறுப்பு, தடைவிடை வெற்றி தோல்வி என்பன தனித்தனியாகவும் இணைத்தும் பேசப் பட்டுள்ளன. இவற்றால் அவை பற்றிய இலக்கணத்தில் பட்டிமண்டயக் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.

“எட்டு வகை நுதலிய அவை’ என்று தொல்காப்பியம் கூறியுள்ளது . எண்வகைக் குணங்கள் கருதிய அவையத்தாரது நிலைமையானும்” என்று இளம் பூரணர் பொருள் விரித்தார் . அவரே எட்டுவகைக் குணங் - களை விரித்து,

“குடிப்பிறப்பு (1), கல்வி (2), ஒழுக்கம்(3), வாய்மை(4), தூய்மை (5), நடுவுநிலைமை (6), அழுக்காறின்மை (7), அவாவின்மை (8), என்பன” என்றார். இதற்குச் சான்றாகப் பழைய நூலாகிய ஆசிரியமாலைப் பாடல் ஒன்றைக் காட்டினார்:பேராசிரியரும்காட்டினார். இவ்வ்ெட்டையும்

காட்டிய ஆசிரியமாலை,