பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 [T] பட்டி மண்டப வரலாறு

தோலா நாவின் மேலோர் பேரவை” என்இ! பாடியது . இதில் தோல்வியுறாத நாவன்மை சுட்டப் பட்டது. இது பட்டிமண்டபக் கருத்தையும் உள்ளடக்கிய தாகும்.

நல்லவை

திருவள்ளுவர் “நல்லவையுள் நன்கு செலச்சொல் லாதார்” என்று நல்லவை’ என்று அடைமொழியிட்டார். முன்றுறையரையரும் நல்லவையுள் புக்கிருந்து’ (24) என்றும் நல்லவை கண்டக்கால்” (25) என்றும் கூறினார். இது என்ன நல்லவை. இதற்கு விடை கூறுவது போன்று யாப்பருங்கலவிருத்தியில் ஒரு மேற்கோள் பாடல் உள்ளது.

“நல்லவை என்பது நாடுங்காலை”

என்று தொடங்கும் அது,

“எத்துறையாயினும் இருவரும் இயம்பும் அத்துறை வல்லோர் அதனொடு புணர்ந்தோர்”

என்று தொடர்ந்து

செற்றமும் சினமும் சேரா மனத்தோர், முனிவொன் றிப்போர், மூர்க்கர் அல்லோர், இனிய முகத்தோர், இருந்துரை கேட்போர் வேந்தன் ஒருவர்க்கா வாரம்

(ஒதுதலைச் சார்பு ஆதல்) படினும் தாந்தாம் ஒருவர்கண் பாங்கு படாதோர்"