பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றி அறிய வேண்டிய நாற்பத்தினான்கு விதிகளைத் தொகுத்துத் தந்துள்ளார் (பக்.31-35).

வாதத்தை கிரேக்கர்கள் டயலகோ டையலெக்டிக்’ என்றன்ர். இதிலிருந்துதான் டயலெக்டிக்ஸ் என்ற சொல்லை ஹெகலும் மார்க்சும் வடித்தெடுத்தனர்.

வடமொழி இலக்கியம், கிரேக்க இலக்கியம் தரும் செய்திகளோடு தமிழகத்தில் சங்க காலம் முதல் இக்காலம் வரை இலக்கியங்கள் தரும் செய்திகளை ஒப்பிட்டுப் பார்க்குமளவில் தமிழகத்தில் சொற்போர் ஒரு கலைத் திறனாக, அறிவுக்கருவியாக வளர்ந்து வந்துள்ளது என்ப தனை நூலாசிரியர் கவிஞர்கோ கோவை இளஞ்சேரன் நிறுவியுள்ளார் மன்றம், அவை, களம், அரங்கு, பட்டி என்னும் சொற்கள் பெறும், தரும் பொருளை வகைப் படுத்திப் பட்டி மன்றம் படிப்படியாக எவ்வாறு வளர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது என்பதனைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். தமிழர் வரலாற்றில் நடைபெற்ற சமயச் சொற்போர்களையும் சமயம் சாராச் சொற்போர்களையும் எடுத்துக்காட்டியுள்ளார். அவை, பட்டி, தருக்கம் என்னும் சொற்கள் தமிழ்ச்சொற்களே என்று நிலை நாட்டுவது பாராட்டுக்குரியது. அருட்பா மருட்பா போர், கம்பராமாயணம், பெரியபுராணம் எரிக்க வேண்டும் வேண்டாம் என்ற சொற்போர், வடமொழிக்கலப்பால் தமிழ்கெடுமா கெடாதா என்பது பற்றிய சொற்போர் நடை பெற்ற வரலாற்றை நடுநிலையிலிருந்து, புறநோக்குடன் எடுத்துக் காட்டுகிறார். சில பத்தாண்டுகளுக்கு முன்

έν