பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் ” 43

பாடியவர் யார் () என்பன அறியக்கூடவில்லை. ஆனால் மிகத் தொன்மைச்சான்றோர் கூறிய கருத்துக்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அவையோர்

தொல்காப்பியர்,

“நிலப்பெயர் குடிப்பெயர், குழுவின் பெயர்"23 என்றார் . குழுவின்’ என்றதை உரையாசிரியர் சேனா வரையர் அவையத்தார் என்றார் . அவையோர் எவரா யினும் அவையத்தார் எனப்பட்டனர்.

புறப்பொருள் வெண்பாமாலை என்னும் புறப் பொருள் இலக்கண நூல்,

“அவைய முல்லை” - என்றொரு துறையை வகுத்துள்ளது . அதன் கொளு என்னும் முன்னோட்ட நூற்பா,

“நவைநீங்க நடுவு கூறும்”

அவை மாந்தர் இயல்புரைத்தன்று” - என்று குறித்து அதன் விரிவாக எழுதப்பட்ட வெண்பா,

“தொடைவிடை” என்று வினாவையும், விடையும் சொல்லித் தொடங்கி எட்டுவகையாக விரித்துள்ளது. எட்டும் பட்டிமண்டப நிகழ்ச்சிகளாக உள்ளன . இதன் இறுதி அடி