பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 49

கூறமாட்டாமல் போன குறைவைச் சொல்லமாட்டார். அதை மறைத்து அவர் சொல்லக்கருதிய பொருளை விளங்கச் சொல்லிக் காட்டுவார்; எல்லார் மனமும் கொள்ளும்படி அறிவிப்பார். இவ்வாறு அவையை நன்றாக நடத்தும் சான்றோர் குழுவும் அவைக்கள நடுவராக அமையும்.

இத்தகைய குழு நன்னன்சேய் நன்னன் அரச அவை யில் இருந்ததை மலைபடுகடாம் விளக்கியுள்ளது . இதன் நிறைவாக, -

நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்துஒழுக்கமும்”

என்று இயக்குவதையும் அதனை ஓர் ஒழுக்கமாகவும் குறித்தது . இவ்விளக்கம் பட்டிமண்டப நடுவர்க்கும் மிகப் பொருந்துவதாகின்றது.

(5) கருத்தாளர் அறைகூவல்

பட்டிமண்டட நிகழ்ச்சிக்கு ஒரு கருத்து அவைமுன் வைக்கப்பெற வேண்டும். முன்வைக்கும் கருத்தாளர் வேண்டும் இரண்டும் இல்லாமல் பட்டி மண்டட நிகழ்ச்சி இல்லை.

வைக்கப்படும் கருத்து நூல் பற்றியதாகவோ இலக்கண, இலக்கியம் பற்றியதாகவோ அமையும் குயக் கொண்டான் நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்குப் பகையான கருத்து முன்வைக்கப்பட்டது சமயக்கருத்துக்கள் பின்