பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சுக்கலை பற்றித் தெய்வசிகாமணி ஆச்சாரியார் மேடைத் தமிழ் என்னும் அரியதொரு நூலெழுதினார். அது எல்லாருடைய பாராட்டுதலையும் பெற்றது. இளஞ்சேரன் நூல் ஒர் ஆய்வு நூல். நல்ல தெள்ளு தமிழில் மொழியியலார்க்கே உரித்தான சொல்லாராய்ச்சி, இலக்கண உசாவல் தொடங்கி இலக்கியச் சான்றுகள் தந்து வரலாற்று நெறிப்படி நூலமைத்துள்ளார். இன்று வானொலியிலும் தொலைக்காட்சியிலும் நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும் சொல்லாடு மன்றங்கள் இயங்கி வருகின்றன. இவையெல்லாம் பாமர மக்களுக்கு இலக்கியச் சுவையூட்டுவதோடு தமிழ் வளர்த்து வருகின்றன. இப்பின்புலத்தில் இத்தகைய நூல் காலத்தின் தேவை. பாமரர் முதல் ஆராய்ச்சி மாணவர்- அறிஞர் வரை ஆழ்ந்து படித்து அறியத்தக்க நூல். இதுகாறும் இத்தகைய நூல் தமிழில் வெளிவந்ததில்லை எனலாம் . இத்தகைய சிறந்த நூலைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தருவதில் எமது நிறுவனம் பெருமைப்படுகிறது.

இந்நூலை ஆழ்ந்து பரிசீலித்துச் செப்பனிட்டு ஆசிரியர் ஒப்புதலுடன் சில திருத்தங்கள் செய்து நூல் சிறப்பாக வெளி வரத்துணை செய்த திரு . ஆர் . பார்த்தசாரதி (ஆர். பி. எஸ்.) அவர்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றி.

பதிப்பகத்தார்.