பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பட்டி மண்டப வரலாறு

என்று கலித்தொகையில் வரும் வாதம் மாறுபாடு என்னும் பொருள் கொண்டது.

மற்றும்,

இதே பாடலில் வாதத்தான் வந்த வளிக்குதிரை மேல்

ஏறிச் செலுத்துபவன் “வாதுவன்” எனப்பட்டான். “காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர்”

என்று இளங்கோவடிகளும் பாடினார். குதிரைமேல் ஏறிச் செலுத்துவது போல் கருத்தை வைத்து அதில் நின்று அக்கருத்தைச் செலுத்துபவனும் வாதுவன்” ஆவான் இவ் வகையில் வாதி’ என்று தமிழ்ச்சொல் பிறந்திருக்கலாம். ஆயினும், இதற்கு உரிய வேர்மூலம் காண இயலவில்லை யாதலால் வாதி என்பதை வடசொல்லாகவே கொள்ள

வேண்டும்.

இவ்வடசொல் தமிழில் புகுந்தது . வடசொல் புகுவ தால் தமிழ் மரபுகள் மாறும், திரியும், முரண்படும் என்பது உண்மையாகிற்று. இவ்வுண்மை, கருத்துப் போரிலும் அமைந்தது. அமைந்து, சங்கப்பாங்கான கருத்துப்போரை - பட்டிமண்டபத்தைத் திசைதிருப்பிற்று.

இதற்குப்பின் வாதி என்னும் சொல்லும் வாதம் என்னும் சொல்லுமே இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் நின்றன. நிற்கின்றன. நின்று எத்திசையில் திருப்பியுள்ளன?