பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் | 55

புலமையாளரை நான்கு பெயர்களில் பிங்கலம் பின்வருமாறு காட்டியுள்ளது.

“கவியே கமகள் வாதி வாக்கி யென்று

இவையொரு நான்கு புலமைக் கியல்பே’ என்றது.

தமிழ்ப் புலமையானாலும் வடசொல்லாம் வாதிப் பெயர்

பெற்றான்.

சிறுபஞ்சமூலம் என்னும் பதினெண்கீழ்க்கணக்கு

நூல் தமிழ்ப் புலமையோர் சிறப்பாக எது எதைப் பெறுவர்

என்பதை,

“பொன்பெறும் கற்றான்; பொருள்பெறும் நற்கவி என்பெறும் வாதி? இசைபெ றும்”

என்று வாதி புகழ்பெறவே கருத்துப்போரிடுவான் என்று காட்டியது.

ஆனால் சிலம்பு காட்டிய பராசரன் பொன்னும் பொருளும் பெறவே வாதிட்டான்.

வடசொல் புகுந்த இடமெல்லாம் புகுந்த இடத்து மரபுகள் குலையும் இது வடமொழியாளர் திட்டமிட்டுச் செய்ததாகும் வாதி என்னும் வடசொல் தமிழில் புகுந்து ஆட்சி பெற்றதால் முன்னிருந்து பட்டிமண்டபச் சொல் மறைந்தது . இருந்த நெறியார்ந்த பண்புகளும் மரபுகளும் மாறின. பட்டிமண்டபம் சங்கப் பாங்கில் பயனுடையதாக