பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 | பட்டி மண்டப வரலாறு

கேட்போரை உணர்ந்து, அறிந்து அவர் விருப்போடு கொள்வதற்கு ஏற்ற வகையில் உரைத்தல் ஒர் “உரை வித்தகம்” ஆகும் . இவ்வித்தகம் தெரிந்தவர் தோற்பன கொண்டுபுகார் அவை” (பழ-18)

செல்லுபடியாகும்படி சொல்லவேண்டும். அந்த வழியறியாமல் பல உரைத்தால் தோற்கவேண்டி நேரும். (நாலடி-313)

தோற்பன தொடரக்கூடாது (ஆ. சூடி. 64) உரிய கருத்தின்றி வெற்றி ஒன்றையே கருதி விலங்கு உணர்வால் சிலர் குத்றிப் பேசுவர். உண்மையை ஏற்க மாட்டார் :

“கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு - ஒன்றி உரைவித்தகம் எழுவார் காண்பவே, கையுள் சுரை வித்துப் போலும் பல்” ஆம், முகத்தில் தாக்கிப் பல்லையும் சுரைக்காய் விதைபோலக் கையில் பெறச் செய்துவிடுவர் (நாலடி-315)

இவ்வகை யாவும் கருத்துப்போருக்கு பட்டி மண்டபத்திற்குக் கொள்ளவேண்டிய தகுதிகள் இவற்றைக் கொள்ளவேண்டும்.

(8) அவையோர் கருத்து

பட்டிமண்டபத்தில் அமைந்த சான்றோர் நடுவரோ, தலைவரோ தீர்ப்புச் சொல்லும் முன் அவையோர் கருத்து