பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் | | 67

வளர்ந்து வஞ்சிமாநகர் புகுந்தாள், ஆண் துறவிக் கோலத்தில் புகுந்தாள். அங்கிருந்த சமயக்கணக்கராம் வாதி களை அணுகினாள். அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, திருமாலிய வாதி, வேத வாதி, ஆசீவகவாதி, நிகண்ட வாதி, சாங்கிய வாதி, வைசேடிகவாதி, பூதவாதி என்று பத்து வகை வாதிகளை உசாவி அவரவர் கோட்பாடுகளை அறிந்தாள். இவர்கட்கு மாற்றமாக ஏதும் கூறவில்லை . எனவே, இது வாதம் ஆகாது என்பதற்கில்லை. மாற்றம் செய்யாத மணிமேகலை பெருஞ்சமயங்களில் ஒன்றாகிய புத்தசமய வாதியை உசாவவில்லை. பிறர்கோட்பாடுகளால் தன் பு த்த சமயப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ளவில்லை. இறுதியில் பூதவாதியின் கோட்பாட்டைக் கேட்டு மாற்றம் கூறினாள் கூறிய கோட்பாட்டை மறுத்தாள், அளவைநூல் விதியில் இவ்வாறு ஏற்காமலும் மாற்றம் தராமலும் விடுதலும், இன்றியமையாத மறுப்புக் கோட்பாட்டை மறுப்பதும் உள்ளன . ஆகையால், மணிமேகலையும் புத்த வாதியாக வாதப்பட்டியலில் அமைந்தவளே.

எனவே, பட்டிமண்டபச் சமயப் பங்கில் மணிமேகலையின் பங்கும் அமைந்தது.

(2) சைவ சமணவாதப் பங்கு

சமயப் பட்டி மண்டபத்தில் மணிமேகலையின் பங்கு

நூற்றுக்கு நூறு உண்மை பொதிந்ததன்று இரட்டைக்

காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை சங்க