பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பட்டி மண்டப வரலாறு

அண்மைக்காலப் புலவர் சாத்தனாரால் எழுதப்பட்டாலும் அவர் புத்தக் கோட்பாட்டிற்காக அதனை எழுதினார் எனவே, மணிமேகலை வரலாற்றின் உண்மைப் பொதிவு

களைவிட சமயக் கற்பனைகள் செறிந்துள்ளன.

ஆனால், முதலில் நடந்ததாக நமக்குக் கிடைக்கும் சைவ சமய வாதம் சைவக்குரவர் ஆளுடையபிள்ளையாம் ஞானசம்பந்தருக்கும் சமணத்துறவியர்க்கும் நிகழ்ந்தது. இந்நிகழ்ச்சி ஞானசம்பந்தர் தாமே பாடிய பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது. அவர் மதுரையில் தொடர்பு கொண்ட பாண்டிய மன்னன் அரிகேசரி என்னும் நின்ற சீர் நெடுமாறன் வரலாற்றிலும், வேள்விக்குடிச் செப் பேட்டிலும் குறிக்கப்படுபவன . எனவே, இவ்வாதம் சற்று அழுத்தம் பெறுவதாகும்.

ஞானசம்பந்தர் மதுரைக்குள் புகுந்தார் . பாண்டிய மன்னனது வெப்புநோயைத் தீர்ப்பதில் ஒரு போட்டி இவருக்கும் சமணத் துறவியர்க்கும்நேர்ந்தது. ஞானசம்பந்தர் திருநீறு வழங்கி வென்றார் தொடர்ந்து ஞானசம்பந்தர் பாடலும், சமணரின் அத்திநாத்தி என்னும் மந்திரமும் எழுதப்பட்ட ஒலைகள் தீயில் இடப்பட்டன . சம்பந்தர் ஒலை எரியாது வென்றது. இது அனல்வாதம் எனப் பட்டது. மூன்றாம் முறையாக இருவர் பாடலும், கோட் பாடும் எழுதப்பட்ட ஒலைகள் ஆற்றில் விடப்பட்டன. சம்பந்தர் ஒலை நீரில் எதிர்த்தேறிவென்றது. ஏறிய ஏட்டை எடுத்த இடம் ஏடகம்'என்றுவழங்கப்படுகின்றது. சமணர்,