பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 69

இட்ட ஒலை ஆற்றோடு போயிற்று இது புனல் வாதம்

எனப்பட்டது.

மும்முறை தோற்றதால் சமணர் தாம் விதித்துக் கொண்டவாறு கழுவில் ஏறினராம். ஆனைமலை முதலாக எட்டுக் குன்றங்களிலிருந்து வந்த எட்டு ஆயிரம் பேர் கழுவில் ஏறி மடிந்த்னர் என்பது ஐயப்பாட்டுடன் நோட்டமிட வேண்டியதாகின்றது . எரியாத ஏடு, எதிர்த் தேறிய ஏடு என்பனவும் வியப்பான கவர்ச்சிகளாகும் என்று

கருதலாம்.

சம்பந்தர் தம் பாடலில் சமணத் துறவியர் பெயர்

களாக,

சந்துசேனன், இந்துசேனன், தருமசேனன், கந்துசேனன், கனகசேனன்

எனப் பாடியுள்ளார்.

கடவுளை வாதப்பொருளாக ஆக்கவிரும்பாதவர் சம்பந்தர், .

“ஏதுக்க ளானும் எடுத்த மொழியானும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி”

என்று பாடினார். இதில் வரும் ஏதுக்கள். எடுத்தமொழி என்பன சமய வாத நெறிகள் . இக்கருத்துடையவர் சமண ருடன் மோதலில் இறங்கச் சிவனிடம் கோயிலில்,