பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 T பட்டி மண்டப வரலாறு


தொடர்ந்து அவ்வூரிலேயே மீண்டும் புத்தர் சாரி புத்தன் தலைமையில் வாதிட வந்தனர் . இவனுடனும் சம்பந்த சரணாலயரே வாதிட்டார். முறைப்படி

உன் தலைவனும் பொருளும் உரை உன் தலைவன் காட்டும் முத்தி எது: வழிபாடு செய்வோர்

என்றெலாம் வினவ, சாரிபுத்தன் விளக்க, இறுதியில் சாரிபுத்தன் தோற்று, சம்பந்தரை வணங்கிச் சைவன் ஆனான்.

இவற்றைத் திருத்தொண்டர் புராணந்தான் காட்டு கின்றது, ஞானசம்பந்தர் பாடல் இல்லை ஒன்றைக் குறிப்பாகக் கொள்ளலாம். தெளிச்சேரி ஊராரை விளித்து

“சாக்கியரோடு சமணர்கள்

  • fro 8 - F 56 தம் திறத்தன நீக்குவித்தீர் ஓர் சதுரரே” என்று வாத எதிர்ப்பை நீக்கியதைப் பாராட்டினார்.

சைவ புத்த வாதத்தில் மாணிக்கவாசகர் FF(8) பட்டதாகத் திருவாதவூரர் புராணம் பாடியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடவுள் மாமுனிவர் என்பார் இப்புராணத்தைப் பாடினார் . இதில் புத்தரை வாதில் வென்ற சருக்கம் உள்ளது.

சைவ முனிவர் ஒருவர் () இலங்கை சென்று இலங்கை மன்னன் () அவையில் தில்லையின் திருவம்பலத்தில்