பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பட்டி மண்டப வரலாறு

- * * 58, .. பொருந்திய தர்க்க நூலால் புத்தரை வெல்வேன் o

என்றார்.

அவை கூடியது. சோழமன்னன் நடுவணன் ஆனான். சான்று கூறச்சான்றோர் அமர்ந்தனர். இலங்கை மன்னனும் அமர்ந்தான். சோழ மன்னன் மாணிக்கவாசகரை வணங்கித்

தங்கள் கடமை r

έ “சைவ ஞான நிலைமையை நிறுத்தல் “ιήσετεπή στεί கடன் புத்தரைக்கொன்று ஒறுத்தல்’ என்றான்.

தருக்கம் தொடங்கியது . கடவுள் யார்? கொள்கை என்ன? என்று தொடங்கிக் கருத்து கருத்தாக மாறி மாறிப் பேசாமல் புத்தர் கருத்துக்களைத் தொகுத்துச் சொல்ல மாணிக்கவாசகர் மறுப்பைத் தொகுப்பாகவே சொன்னார்.

இதுபோன்றே புத்தனும் சொன்னான்.

மாணிக்கவாசகர் இலங்கை மன்னனின் ஊமை மகளைப் புத்தனுக்கு விடை சொல்லுமாறு பணித்தார். ஊமைப்பெண் பேசி விடையளித்தாள் புத்தர்கள் சைவக் கருத்தை ஏற்றுச் சைவராகப் பொன்னம்பலத்திலேயே தங்கினர். w

இப்புராணத்தில் இலங்கைசென்றமுனிவர்பெயரோ,

தில்லை வந்தபுத்தத்தலைவன் பெயரோ, இலங்கை மன்னன் பெயரோ, சோழமன்னன் பெயரோ குறிக்கப்படவில்லை.