பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 75

ஆனால் மாணிக்கவாசகர்,

“கட்டறுத்தெனை ஆண்டுகண் ணாரநீறு

இட்ட அன்பரோடியாவரும் காணவே

பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை . எட்டினோடிரண்டும்அறியேனையே”

என்று தம் திருச்சதகத்தில் (49) பாடியுள்ளமை ஒரு சான்றாகின்றது . இப்பாட்டில் காணப்படும் நீறு இட்ட அன்பரோடு யாவரும் காணவே என்பதும் பட்டிமண்டபம் ஏற்றினை என்பதும் கதை நிகழ்ச்சியைச் சுட்டுவனவாக உள்ளன.

ஆயினும், கடவுளே அறைகூவிக் கொடி பிடித்ததும், பொன்னம்பலத்தில் புத்தர்சிலை வைப்பதாகக் கூறியதும், அடுத்தடுத்து மாறி மாறிப் பேசாமல் தொகுப்பாக உரைத்தமையும், ஒறுத்தலாகப் புத்தரைக் கொல்வேன்’ என்று மன்னன் உரைத்தமையும், சான்று கூற வந்தோர் அவையில் அமர்ந்தமையும் சமயப் பங்கில் சில புதுத் தோற்றங்களாக கொள்ளப்பட்வேண்டியவை.

இதில் தர்க்கம் எனும் சொல்லே மிகுதியாகக் கையாளப்பெற்றுள்ளது.

எவ்வாறாயி னும் இவ்வாதமும் சைவ-புத்தவாதத்தால் சமயப் பங்காகிறது. .