பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 T பட்டி மண்டட வரலா9 76 [ o-46-

(4) சமண - புத்த வாதப் பங்கு

பட்டி மண்டபச் சமயப் பங்கில் சமணம் முதன்மை யாகவும் புத்தம் அதற்கீடாகவும் ஈடுபாடு காட்டியவை. குண்டலகேசி புத்த சமய வாதிகளில் தனி முடி குடியவள். நீலகேசி இணைமுடி சூடியவள் இருவர்க்கும் இரண்டு தமிழ்ச் காப்பியங்கள் அவரவர் பெயரால் உள்ளன. குண்டலகேசிக் காப்பியம் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று நீலகேசிக் காப்பியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று இரண்டும் நூற்றுக்கு நூறு சமய வாதத்திலேயே நிறைந்த காப்பியங்கள். முன்னது ஆறாம் நூற்றாண்டிலும் பின்னது ஏழாம் நூற்றாண்டிலும் தோன்றின. இரண்டின் ஆசிரியர் பெயர்களும் அறியப்படவில்லை இருவர் கதைகளும் கற்பனைகள்ே குண்டலகேசியும் கணவனைப்

பழிவாங்கியவள், நீலகேசியும் அவ்வாறே.

குண்டலகேசிக் காப்பியப் பாடல்களாக 19 செய்யுள் ளே கிடைத்துள்ளன. அவற்றில் அவளைப் பற்றிய கதைக் குறிப்பு ஒன்றும் இல்லை. அப்புத்த நூலை மறுக்க வாதக் காப்பியமாகத் தோன்றியதே நீலகேசிக் காப்பியம் இக் காப்பியந்தான் குண்டலகேசியின் கதையைக் கூறியது.

காதில் அணியும் குண்டலம் போன்று சுருண்ட கூந்தலை (கேசத்தை உடைமையால் இப்பெயர் பெற்றாள். தன்னைப் பழிவாங்க எண்ணிய கணவனைப் பழிவாங்கித் “தற்கொல்லியை முற்கொல்லி” என்று பெயர் பெற்றவள்