பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 79

நீலகேசி ஆசிரியர் தாம் கனவில் கண்ட பெண்ணை வைத்துக் காப்பியம் இயற்ற முனைந்தவர் . தமிழ்நாட்டுப் பெண் ஒருத்தியின் பதிவாகவே நீலகேசியை அமைத்தார்.

தமிழ்நாட்டில் பழையனூர் நீலி யென்பாள் கணவனைப் பழிவாங்கப் பேயாகத் திரிந்தாள் அவள் போன்றே நீலகேசியைப் படைத்துப்பேய்நீலகேசி என்றே

பாடினார்.

நீலகேசி போன்று பிங்கலகேசி, அஞ்சனகேசி, சாலகேசி எனப் பல கேசிகள் வாதம் செய்தனராம் . இப் பெயரில் வாத நூல்கள் இருந்துமறைந்தன.

எனவே சமய வாத உலகில் சமணரே முனைந்து நின்றதால் அவர் தருக்கச் சமணர் எனப்பட்டனர்.

இது சமண புத்தப் பங்கு. (5) திருமாலிய இராமானுசர் வாதப் பங்கு

சைவரைப் போன்றே திருமாலியரும் வாத முறையை விரும்பாதவரே. அவருள் இராமானுசர் முற்போக்கானவர்.

இத்தமிழ்நாடுதன் இருந்தவப் பயனாய் இராமானுசனை ஈன்ற தன்றோ”

என்று பாவேந்தர் பாரதிதாசனாரால் போற்றப்பட்டவர் .

இவர் வாதத் துறையில் ஈடுபட்டுச் சிறந்தார். இவர் ஏதும் பாடவில்லை என்றாலும் இவரைப் போற்றி இராமானுச