பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனவே இதை குறித்து உழைப்பவர் ஆயுதம் மாத இதழில் பண்டிதர் பற்றின சிறப்பிதழுக்கு அதன் ஆசிரியர் தா.ம. பிரகாஷ் கட்டுரை கேட்டபோது பிரப்வரி 2007ல் கட்டுரை எழுதி அனுப்பினேன். அது மே மாதம் வெளியானது கட்டுரையை படித்த பல நண்பர்கள் அதை ஒரு சிறு நூலாக வெளியிடும் ஆர்வத்தை வெளியிட்டார்கள் அதனால் அச்சிறு கட்டுரையை விரிவாக்கி இப்போது நூலாக உங்கள் கையில் எனவே சூழலுக்கும், பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றிகள், மேலும் சாக்ய ஜெ. மோகன். பாரிச்செழியன், நூலை வெளியிட முயற்சி எடுத்துக்கொண்ட கண்ணியப்பன சிவப்பிரகாசம், இராஜாங்கம் பிரவீன், ராஜவேல், மெய்ப்பு திருத்துவதில் உதவி புரிந்த சந்திரசேகர் ஆகியோருக்கும் நூலையும் அட்டையையும் வடிவமைத்த ஒவியர் யாக்கன். ஒளியச் செய்து அச்சிட்ட முல்லை அச்சகத்தாருக்கும் இந்நூலை வெளியிட்ட சங்கம் - அதன் பதிப்பக பொறுப்பாளர் புருஷோத்தமன் நண்பர்கள் குடியரசு, அமைதியரசு ஆகியோருக்கும், நூலை வெளியிட முழு உதவியையும் செய்த அகில இந்திய காப்பீட்டுக் கழக எஸ்/எடி ஊழியர் சங்கத்திற்கும், எனக்கு எழுதும் சூழலை உருவாக்கித் தரும் என் குடும்பத்தாருக்கும் நன்றிகள் பல.

17.06.2007

கௌதம சன்னா

பெருந்தலைவர்

g_sannahsiyahoo.com

எம்.சி. ராஜா பிறந்தநாள்

8 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை