பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1
சாதி இந்துவின் நன்றி !


த்துவஞானிகள் அரசர்களாகும் வரையிலும் அல்லது இவ்வுலக அரசர்களும் அரசிளங்குமரர்களும் தத்துவ ஞானத்தின் சக்தியையும் மனப்பான்மையையும் கொள்ளும் வரையிலும். அரசியல் மேதைமையும் ஞானமும் ஒருவரில் சேர்ந்து காணப்படும் வரையிலும், பொதுமக்கள் இரண்டில் ஒன்றை மட்டும் தொடர்ந்து கொண்டு, மற்றதை விட்டு விட்டு இருக்கும்போது. ஒதுங்கி இருக்கக் கட்டாயப்படுத்தும் வரையிலும் நகரங்கள் அவற்றின் கேடுகளிலிருந்து ஒய்வு பெறாது. இல்லை. மனித இனமே ஒய்வு பெறாது என நம்புகிறேன் பிறகே இந்த நமது நாடு உயிர்பெறக் கூடும் வெளிச்சத்தைக் காணக்கூடும்.

இந்த கருத்தை சாக்ரடீஸ் கூறியவுடன் அவருடன் விவாதம் புரியும் கிளாக்கன் பதட்டமடைந்து...

'என்ன கூறிவிட்டாய் சாக்ரடீஸ், கண்ணியமானவர்கள் கூட தங்கள் உடைகளை கழற்றிவிட்டு இதற்காக உன்னைத் தாக்க முழு பலத்தோடு வருவார்கள்...'

என்று பதில் சொல்கிறான்.

பிளேட்டோவின் குடியரசு நூலில் காணப்படும் இந்த விவாதம் இன்று வரையிலும் செயல்படுத்த சாத்தியமற்றதாகவே கருதப்பட்டு வந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.

எனினும் பிளேட்டோவின் யோசனை நடைமுறை படுத்தப்படாமலில்லை, பல்வேறு காலகட்டங்களில் அவரின் தீர்க்க தரிசனம் நிறைவேறியுள்ளது. லெனின், மாவோ இதற்கு தகுந்த உதாரணங்கள். நம் நாட்டில் அரசியல் மேதமையும், ஞானமும் வாய்ந்தவர்களில் அம்பேத்கர் முதன்மையானவர். இவரும் அரசு பரிபாலனத்தில் பங்கேற்று நாட்டை வழி நடத்தியுள்ளார். ஆனால் பிளேட்டோ சொன்னதைப் போல ஒரு அரசனாகும் வாய்ப்பில்லாதவராகவே போய்விட்டார் என்றால் யார்

9 / பண்டிதரின் .... சமூகநீதிக் கொள்கை