பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வங்காளத்தில் இராணுவ கலகம் நடந்த காலத்தில் ஒவ்வோர் துறை மக்களுக்கும் அரண்மனை உத்யோகஸ்தர்களாய் சென்ற வர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களே.

அம் மியுட்டினியிலிருந்த துறை மக்கள் யாவருக்கும் இது தெரிந்த விஷயமாதலின் இராஜ விசுவாசமும், நன்றியும் உள்ளவர் களென்றறிந்த அந்த ஜெனரல் இவர்களையே ஒன்று கூட்டி இராயல் ஆர்ஸ் ஆர்டில்லேரி (Royal HorseArtillery- ராயல் குதிரை பீரங்கிப் படை ) சேர்க்கும்படி ஆரம்பித்தார்.

அக்காலத்திலிருந்து படைத் தலைவராகும் லார்ட் ராபர்ட் துறையவர்களாலோ மற்றவர்களாலோ அப்பட்டாளம் சேர்க்கப் படாமல் தவிர்க்கப்பட்டது." (1:161-2)

எனவே மீண்டும் அந்த படை உருவாக்க வேண்டும், இராணுவ வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று 1909 ஜூலை 21ம் நாள் தமிழனில் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், பின்வந்த காலங்களில் பிரிட்டிஷ் அரசானது அரசு நடத்த தேவைப்பட்ட அளவிலான சமூக மாற்றத்திற்காக சீர்திருத்தங் களை தொடங்கி இருந்தது கல்வி சமூகம், பராமரிப்பு நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் சிறிய மாற்றங்களை அனுமதித்தது. அது அனுமதித்ததற் கான வரலாற்றுப் பின்னணியை ஆய்வது இங்கு முக்கியமல்ல, அது அனு மதித்த மாற்றங்கள் மட்டுமே இங்கு கணக்கிலெடுக்கப்படுகிறது.

பிறகு 1887ல் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் முறையை வெள்ளை அரசு அறிமுகப்படுத்தி, அதில் இந்தியர்களை குறிப்பிட்ட சதவிகிதம்வரை அனுமதித்ததின் மூலம் முதன் முறையாக இந்தியர்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது. அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்று வியாபாரத்தையும், செல்வத்தையும் காத்துக் கொள்ளவும், அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் 1884ல் சென்னை மகாசபை உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பார்ப்பனர்கள், வியாபாரிகள், முதலாளிகள். பண்ணையார்கள் உள்ளிட்ட மேல்தட்டு வர்க்கத்தினரே இடம் பெற்றிருந்தார்கள். இச்சங்கத்தின் நோக்கமும் அவர்களது நலனை காத்துக் கொள்வதுதான், இந்த சங்கம்தான் பின்பு காங்கிரஸ் என்ற அகில இந்திய அளவிலான பேரமைப்பைத் தொடங் கியது. இந்த அமைப்பிலிருந்தவர்களே காங்கிரஸின் முதன்மைத் தலைவர்களாய் இருந்தார்கள். 1885ல் தொடங்கப்பட்ட காங்கிரஸின்

13 / பண்டிதரின் .... சமூகநீதிக் கொள்கை