பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோரிக்கை : 2

இக்குலத்து ஏழைகள் விருத்தி அடையும்படி கல்விச் சாலைகள் பிரத்யேகமாய் அமைத்து உபாத்யாயர்களையும் இக் குலத்தோரில் நியமித்து மாணாக்கர்களின் சம்பளங்களையும் அரை பாகமாய் குறைக்க வேண்டியது.

கோரிக்கை : 3

இக்குலத்து பிள்ளைகளுள் பிரவேச மெட்ரிக்குலேஷன் பரிட்சையில் தேறிய மூன்று பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்க வேண்டியது.

கோரிக்கை : 4

இங்ங்னம் கல்வியில் தேரினோர்களில் ஒவ்வொருவரையும் இத்தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கவர்ன்மென்ட் ஆபீசுகளிலும் உத்யோகமளித்து ஆதரிக்க வேண்டும்.

கோரிக்கை : 5

இவர்கள் கல்வி நல்லொழுக்கத்திற்கு தக்கவாறு எத்தகைய உத்யோகங்களையும் தடையின்றி கொடுத்து வரவேண்டியது.

கோரிக்கை : 6

முனிசிபல் சங்கங்களிலும், கிராம சங்கங்களிலும் இக்குலத்தோரின் கஷ்ட நஷ்டங்களை அறிந்து பேசுவதோடு சகல டிஸ்ட்ரிக்குகளிலும் ஜில்லாக்களிலும் ஒருவர் பெருந்தொகையான வரி செலுத்தக்கூடாத வராயினும் கல்வி, நல்லொழுக்கங் கண்டு இக்குலத்தோர் யாரை நியமிக்கிறார்களோ அவர்களை ஓர் அங்கமாக ஏற்றுக்கொண்டு காரியாதிகளை நடத்த வேண்டும்.

கோரிக்கை 10

இக்குலத்தோர் பெருந்தொகையார் வாசஞ் செய்யும் கிராமங்களில் மணியக்காரன், முனிசிப்பு அலுவலர்களில் இவர்களில் (தலித்) பொறுப்பானவர்கள் ஒவ்வொருவரை நியமிப் பதுடன் கலெக்டர். தலைவர்கள் கிராமங்களுக்குள் வருங்கால் நேரில் இவர்களை விசாரித்து நீதி அளிக்க வேண்டும். ( 76.77)

கௌதம சன்னா / 16