பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாரை நியமிக்கிறார்களோ அவர்களை அங்கமாக ஏற்றுக் கொள்வது. இது தனிப்பிரதிநிதித்துவம் என்பதாகும். 1909ல் முஸ்லீம்களுக்கு அளிக்கப் பட்ட தனி பிரதிநிதித்துவம் (Separate Representation) என்பதைப் போன்றது. இந்த தனி பிரதிநிதித்துவம்தான் பின்பு தனித்தொகுதியாக இரட்டை வாக்குரிமையாக மலர்ந்தது.

கோரிக்கை 10ன் படி : கிராம நிர்வாகப் பணிகளில் இக்குலத்தா ருக்கு அதிகாரம்.

... . இந்த விளக்கங்கள் போதுமானவை. தலித் இயக்கங்கள் பின்னாளில் எவையெல்லாம் முன்வைத்தனவோ அவையெல்லாம் பண்டிதரால் முன் வைக்கப்பட்டவை என்பது ஒப்பிட்டுப் பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

மேலும் டஃரின் பிரபு அட்சிசன் குழுவுக்கு ஆலோசனை வழங் கியதில் படித்த பணம் படைத்த உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடும் முன் னுரிமையையும் வழங்க வேண்டும் என்று 1888ல் சொன்னதோடு, பண்டி தரின் மேற்கண்ட முன்வைப்புகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இட ஒதுக்கீடு எனும் கருத்தில் தலைகீழ் மாற்றத்தை முன்வைக்கிறார். மேலி ருந்து கீழாக அல்லாமல் கீழிருந்து மேலாக என்ற நிலையை முதன் முதலாக முன்வைத்தவராக பண்டிதர் இருக்கிறார்.

இருப்பினும் ஒர் அம்சம் மீதமுள்ளது. சென்னை மகாஜன சபைக்கு முன்வைத்த கோரிக்கைகளில் இரண்டினைப் பார்க்க வேண்டும்.

சிவன், விஷ்ணு கோயில்களில் நுழைய உரிமை என்ற கோரிக்கை.

இந்த சாதி இந்து கோயில்களில் நுழைய பண்டிதர் அனுமதி கேட்டதும் அது எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட்டது. இக்காலத்தில் பண்டிதர் பெளத்தத்தை முழுவதும் உள்வாங்கி இருந்தாலும், ஒடுக்கப் பட்ட மக்களுக்கான கோரிக்கையாக இந்து கோயில்களில் நுழைவதற்கான உரிமை கேட்டு அது மறுக்கப்பட்ட உடன் அதை விவாதப் பொரு ளாக்காமல் பொருளாதாரக் கோரிக்கையில் கவனத்தை குவித்தார். உண்மையில் கோயில் நுழைவில் தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் பின் னாளில் கூட அக்கறை காட்டாதது எதேச்சையானதல்ல.

அடுத்ததாக, பயன்படுத்தாத நிலங்களை இக்குல மக்களுக்கு கொடுக்க வேண்டும் எனக் கோரியது. இந்த கோரிக்கை இன்றுவரை தொடர்ந்து வரும் ஒரு கோரிக்கையாக இருப்பதை நாம் பார்த்துக்

21 / பண்டிதரின்- சமூகநீதிக் கொள்கை