பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3

தொடங்கிய

கதிப்போக்கில்...


இதுவரை பார்த்தவை அன்றைக்கு நிலவிய அரசியல் சூழலை முன்வைத்து இடஒதுக்கீடு கோரிக்கையில் பண்டிதரின் முயற்சிகளையும், அதன் தொடக்க கால வரையறுப்புகளையும் பார்த்தோம். இந்த முயற்சிகளுக்குப் பிறகு 1892 முதல் 1907 வரை நமக்கு போதுமான தரவுகள் கிடைக்கவில்லை. மேலும் பிரிட்டிஷ் அரசு 1892ல் ஏற்படுத்திய அரசு பிரதிநிதித்துவ சீர்திருத்தத்திற்குப் பிறகு 1909ல்தான் மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தை கொண்டு வந்தது. எனவே இந்த சூழலில் பண்டிதரின் கோரிக்கைகள், முயற்சிகள் எப்படி இருந்தது. அதன் விளைவுகள் எப்படி இருந்தன என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் 1905 முதல் 1909 வரையில் நடந்த அரசியல் மாற்றங்கள் இந்திய துணை கண்டத்தின் தலையெழுத்தையே நிர்ணயித்தன என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். அந்த நெருக்கடியான காலகட்டத்தில் பண்டிதரின் முயற்சிகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் அக்கால சமூக அரசியல் சூழலைப் புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே, வரலாற்றுப் பக்கங்களை கொஞ்சம் பின்னோக்கி புரட்டிப் பார்ப்போம்.

பிரிட்டிஷ் இந்தியாவில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்த வைஸ்ராய். கர்சன் பிரபு (1899 - 1905) 1905 ஆம் ஆண்டு, நிலப்பரப்பில் பெரியதாகவும், 78 கோடி மக்கள் தொகையோடு நிர்வகிப்பதற்கு சிரமம் தரக்கூடியதாக இருந்த வங்காளத்தை இரண்டு மாகாணமாகப் பிரித்தார். இது வங்காளிகளிடையே பிளவை உண்டு பண்ணுவதாக வங்காளிகளின் படித்த நடுத்தர, உயர் வகுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்பை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்வதில் சட்டம் படித்த மற்றும் உயர்சாதி வர்க்கத்தினர் வெற்றி பெற்றார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். வரலாற்றில் வங்கப் பிரிவினை என்று இது அழைக்கப்படுகிறது. பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தை கர்சன் பிரபு ஏற்றுக் கொள்ளவில்லை, அவர் நிர்வாக வசதிக்கான காரணங்களை தேவையின்றி இந்த நடுத்தர வர்க்கப் போராட்டக்காரர்கள் அரசியல்

23 / பண்டிதரின் .... சமூகநீதிக் கொள்கை