பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்பதில் ஐயமில்லை, தான் நடத்திய கேசரி பத்திரிக்கையில் தீண்டத் தகாதவர்களின் செய்தி வந்தால்கூட இதழ் தீட்டாகிவிடும் என்பதில் கவன மாக இருந்தவர்தான் திலக்.

ஆனால், மிதவாதிகள் என்பவர்கள் இன்னும் நுட்பமானவர்கள் பிரிட்டிஷ் அரசிடம் எவ்வளவு சலுகைகளைப் பெற முடியுமே அவ்வள வையும் நாசுக்காகப் பெறுவது தான் அவர்களது கொள்கை, சொல்லப் போனால் காங்கிரசின் பிரதானக் கொள்கையே அதுதான். அதனால்தான் அதன் கொள்கை "பிச்சைக்காரன் கொள்கை" (Mendicant polices) என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்படி பிச்சையெடுத்து பதவிகளில் அமர்ந்த பார்ப்பன - உயர்சாதி வர்க்கத்தின் மீது திலக் குழுவிற்கு கோப மில்லை, அவர்களை ஒழிக்க அது முனைந்ததுமில்லை.

மிண்டோ இந்தியாவிற்கு வந்தபோது இந்த குழுக்களிடையே இருந்த பிரிவினைகளை, வங்கப்பிரிவினையால் உண்டான கொந்தளிப்பு களையெல்லாம் கவனத்தில் கொண்டு தன்னுடைய பணிகளைத் தொடங் கினார். அவர் காங்கிரசை ஒரு சக்தியுள்ள அமைப்பாக கண்டு கொண்டு அதன் ஆதரவு அரசினை நடத்த தேவை என்றும், அதே போல முஸ்லீம் களின் ஆதரவும் தேவை என்பதையும் வலியுறுத்தினார். இங்கிலாந்தில் இந்தியாவுக்கான செயலராய் இருந்த ஜான் மார்லி பிரபுவுக்கு இது குறித்து கடிதங்களை எழுதினார். ஏற்கெனவே வைஸ்ராயாக இருந்த கர்சன்பிரபு காங்கிரசுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, எனவே முக்கியத்துவம் கொடுத்த மிண்டோ பிரபுவை இந்தியர்களின் நண்பராக காங்கிரஸ் கண்டு கொண்டது. காங்கிரஸ் அப்படி கண்டு கொண்டாலும் காங்கிரஸ்க்குள் நடந்த மோதல்களை ஆர்வத்துடன் மிண்டோ கவனித்து வந்ததுடன் அதில் மிதவாதிகள் வெற்றி பெற வேண்டுமெனவும் அவர் விரும்பினார். இதை மார்லிக்கு எழுதிய கடிதத்திலும் தெரியப்படுத்தினார். எனவே மிண்டோவின் நடவடிக்கைகள் தெளிவாகப் புலப்பட்டுவிட்டது. அவர் மிதவாதிகள் வெல்ல வேண்டும் என்று விரும்புவதன் மூலம் அந்த குழுக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அதை வலுவுள்ளதாக மாற்ற விரும்பினார். அதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழும் புதிய சக்திகளை பலவீனப் படுத்த முடியும் என்று கணக்குப்போட்டார். ஏனெனில் அவரது பிரதான நோக்கம் பிரிட்டிஷ் அரசை நிலைநிறுத்துவதுதானே. இவரது கருத்துக்கு இசைவது போலவே லண்டனிலிருந்து இந்திய செயலர் மிண்டோ பிரபு மிதவாதிகள் மீது அன்பு கொண்டிருந்தார். ஆனால் இருவருமே "இந்தியர் கள் நாட்டை சுதந்திரமாக ஆளக்கூடிய அளவிற்கு தகுதியுடையவர்கள்

25 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை