பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அல்ல என்றும், அவர்களில் விடுதலைக் கனவு காணும் ஒரு பிரிவினரின் எண்ணம் அடையக்கூடிய தூரத்திலிருந்து வெகு தொலைவிலிருக்கிறது" என்றும் கருதினார்கள், அதை வெளிப்படையாகவும் சொல்லவும் செய்தார்கள்.

காங்கிரஸ் சண்டையும், அரசின் பரிவும் இப்படிப்பட்ட போக்காய் இருந்த நேரத்தில் முஸ்லீம்களின் நடவடிக்கை எப்படி இருந்தது?

1885ல் பம்பாயில் கூடிய காங்கிரசில் மொத்தம் 72 பேரில் 2 பேர் மட்டுமே முஸ்லீம்கள், தொடர்ந்து முஸ்லீம்களின் எண்ணிக்கை மந்த மாகவே வளர்ந்தது. அதிகப்பட்சமாக 1899ல் பம்பாயில் கூடிய காங்கி ரசில் மொத்தம் 789 பேரில் 313 பேர் முஸ்லீம் பிரதிநிதிகள், ஆனால் இந்த எண்ணிக்கை கிடுகிடுவென வீழ்ந்தது. 1904ல் பம்பாய் காங்கிரசில் மொத்தம் 1,010 பேரில் முஸ்லீம்கள் 35 பேர். 1905ல் பெனாரஸ் காங்கிரசில் 756 பேரில் முஸ்லிம்கள் 20 பேர் 1906ல் கூடிய கல்கத்தா காங்கிரசில் 1663 பேரில் 45 பேர் மட்டுமே முஸ்லீம்கள், இதற்கு பிறகு முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் ஏறவே இல்லை.

நிலைமை தெளிவாகிவிட்டது. முஸ்லீம்கள் காங்கிரசை நம்பவில்லை. காங்கிரசுக்குள் நடந்த போட்டிகளினால் அவர்கள் ஒதுக்கப் பட்டனர். எனவே தங்கள் அரசியல் நலனைக் காத்துக் கொள்ள முஸ்லிம்கள் முனைந்தார்கள். 1906ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் நாள் வைஸ்ராய் மிண்டோ பிரபுவை சந்தித்த முஸ்லீம் பிரதிநிதிகள் தங்கள் நிலையை தெளிவு படுத்தினார்கள்.

"இந்த ஆண்டில் தொடங்கப்படும் முஸ்லீம் லீக்கை இந்திய வரலாற் றில் மாபெரும் முக்கியத்துவமுள்ளதாகவும், வரலாற்றுப் பூர்வமாக இந்திய மக்கள் தொகையில் முக்கியமான பாத்திரம் வகிக்கும் முஸ்லிம்தனியொரு வகையினமாக நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.” (2006 : 187)

முஸ்லீம்கள் தங்களை தனியொரு வகையாக அங்கீகரிக்க கோருவதின் பின்னணியை புரிந்து கொண்டே மிண்டோ அதன் மீது கரிசனம் காட்டத் தொடங்கினார். அதை விரும்பினார்.

இந்த காலகட்டத்தில் தலித் மக்களியக்கம் எப்படி இருந்தது. உண்மையில் களப்பிரர் காலத்து வரலாற்று சுவடுகளில் அழிக்கப்பட்டது போலத்தான், இந்திய சமூக அரசியல் கொந்தளிப்பில் தாழ்த்தப்பட்டோரின் அரசியல் மூழ்கடிக்கப்பட்டது. வரலாற்றில் மறைக்கப்பட்டது. எனி னும் நம்பிக்கை அளிக்கக் கூடிய அளவில் சான்றுகள் நம்மிடையே

கௌதம சன்னா / 26