பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் நிலைமை தீவிரம் அடைந்து கொண்டிருந்தது. மார்லியவர் களின் திட்டத்தை வெளிப்படையாக அறிந்து கொள்ள எல்லோரும் ஆவ லாய் இருந்தார்கள்.

இந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த சூழலில், தேசிய தொழில் நிதிய கூட்டமைப்பு (National Industrial fund Assn) அமைப்பிடமிருந்து 1908, செப்டம்பர் 24ம் தேதி மூன்று கடிதங்கள் பண்டிதருக்கு வந்தது. அக்கடிதத்தில்

"வருகிற தீபாவளியன்று சகலரிடத்திலும் பணம் வசூல் செய்து மேற்கண்டபடி பண்டில் சேர்த்து கைத்தொழில்களை விருத்தி செய்ய வேண்டுமென்றும் அதில் இராயப்பேட்டை கிளையோராக நின்று பணம் சேகரிப்பதற்கு

ம - அ - அ -ஸ்ரீ

ஜி. நாராயண செட்டிகாரு

எஸ். கஸ்துரி ரங்க ஐயங்காரவர்கள், பி.ஏ.பி.எல்,,

ஏ. அரங்கசாமி ஐயங்கார். பி.ஏ.

க. அயோத்திதாசர் அவர்கள்

வி. திருவேங்கடாச்சாரியவர்கள் . பி.ஏ, பிஎல் (1:78)

ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவிற்கு உள்ள கடமைகளும் விளக்கப்பட்டிருந்தன. கடிதத்தின் கோரிக்கைகளைப் பற்றி விரிவாக அலச சாதி பேதமற்ற திராவிட மகாஜன சபையின் முக்கிய அங்கத்தினர்கள் கூட்டப்பட்டு கடிதம் அவர்கள் முன் வைக்கப்பட்டு தீர ஆலோசனை செய்தார் பண்டிதர்.

அந்த ஆலோசனையில் உறுதி செய்யப்பட்ட விவரங்களை பண்டிதர் குறிப்பிட்டார். அதில்

அந்த இஸ்டஸ்ட்ரியல் பண்டு நிறுவனத்தில் - அச்சங்க உத்யோகத்தில்

பிராமணர்கள் 14 பேர்
செட்டியார் 1 நபர்
முதலியார் 1 நபர்
மகமதியர் 1 நபர்
நாயுடு 3 பேர்

கௌதம சன்னா / 32