பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

இந்து - முஸ்லீம்

ஒற்றுமை எனும்...

மிண்டோ - மார்லி சீர்த்திருத்த நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும்போது பிரிட்டிஷ் சக்ரவர்த்தி ஏழாவது எட்வர்ட் அவர்கள் இந்திய மன்னர்களுக்கும், பிரிட்டிஷ் இந்திய குடிகளுக்கும் வைஸ்ராய் மூலம் கடிதம் அனுப்பினார். கடிதத்தின் செய்திகள் மக்களுக்கு அறிவிக்கப்பட்டதில், அக்கடிதத்தின் எட்டாவது, ஒன்பதாவது வசனங்கள் 1: 114) தாழ்த்தப்பட்டோரிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியது.

பண்டிதர் சாதிபேதமற்ற திராவிட மகாஜனசபை மூலம் கோரிக்கை அனுப்பியதின் விளைவுகள் அவை என்று விளக்கினார். அம்மனுவை அளித்ததினால் இரண்டு நன்மைகள் கிடைக்கும் என்று உறுதியளிக்கப் பட்டிருந்தது.

1. உத்யோக பீட சாதிபேத இடுக்கங்கள் மெல்ல நீங்கும்.

2.இவ்வெழிய குலத்தோருக்காகும் மைனர் நியமனம் ஆறு பேரிருக்கும் ( 1 ; 14) (Members will appointed to the Assembly)

என்று அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக (ஆக்கியாபித்து) பண்டிதர் அறிவித்தார். (இதன்படி அரசு கொள்கையளவில் அதை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில் இதே அளவுப் பிரதிநிதித்துவம் தான் 1916-21 சீர்திருத்தத்தில் உறுதி செய்யப்பட்டது.)

எனினும் அனைத்து சமூகங்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டபோதும், அருண்டேல் கமிட்டியின் பரிந்துரைகளில் தாக்கம் பெற்று மார்லி பிரபு தன்னுடைய முதற்கட்ட ஆலோசனையை முன் வைத்தார். வைஸ்ராய் மிண்டோவிற்கு 1908ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளிட்ட கடிதத்தில் அவரின் ஆலோசனைகள் இருந்தன அதில்.

ஒரு மாகாணத்தின் மக்கள் தொகை 2 கோடி எனில் அதில் இந்துக்கள் மற்றும் முகமதியர்கள் முறையே 15 மற்றும் 0.5 கோடி

35 / பண்டிதரின்- சமூகநீதிக் கொள்கை