பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டுவாக்காளர் முறை (loint electorate) படிதான். எனவே முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இந்துக்களின் தயவு தேவைப்பட்டது. இந்த சந்தேகம் மார்லிக்கே இருந்ததால் முஸ்லீம்களுக்கு நியமன முறையையும் சேர்த்தே பரிந்துரை செய்தார்.

எனவே, மார்லியின் கருத்துக்கள் வெளியானவுடன் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் களைகட்டிவிட்டன. மார்லியின் ஆலோசனைகளை முழு வதுமாக மிண்டோவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்றாலும், அதைப் பற்றின கருத்துப் பரிமற்றங்கள் நடந்தன. தன்னுடைய இந்த புது முயற்சியானது உள்ளூர் சுய அரசுக்கான திசையை நோக்கிய தாக்கமுள்ள முன்முயற்சியாக இருக்கும் என ஆலோசனை சொன்னார் மார்லி. இப்படி வாதப் - பிரதிவாதங்கள் நடந்த போதுதான் 17.12.1908 அன்று லண்டனி லுள்ள பிரபுக்கள் அவையில் அதை மசோதாவாக முன்வைத்தார். அவை யில் முன்வைத்தவுடன் பலத்த எதிர்ப்பு எழுந்தது. சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் ஏற்பாடு உச்சகட்ட அரசியல் வெப்பத்தை கிளப்பி விட்டது. பிரிட்டிஷ் அரசு, இந்திய வைஸ்ராய் மற்றும் முகமதியர் களுக்கு மார்லியின் திட்டம் ஒரு புதினத்தை போலவும், குழப்பமான தாகவும் தோன்றியது. 1906ல் முஸ்லிம்கள் கேட்டது போல தனிப் பிரதி நிதித்துவம் கொடுக்கப் படுவதைவிட மார்லியின் திட்டம் தேவையற்ற சிக்கலை உருவாக்குவதாகவும் கருதப்பட்டது. மேலும் மார்லி முன் வைத்த தேர்தல்முறையானது நடைமுறை சாத்தியமற்றது என்று வைஸ்ராய் மிண்டோ கருதினார்.

மார்லியினை கண்டித்தும் அவரது நிலைபாடு குறித்தும் விமர்ச்சித்து பலவாறாக பத்திரிக்கைகள் எழுதின. சாதி இந்து பத்திரிக்கைகளின் நிலைபாட்டையும், அது தொடர்புடையவர்களின் விமர்சனத்தையும் பண்டிதர் கண்டித்தார். 30.12.1908 தமிழன் இதழில்

"சொந்த மக்களிடையே சீர்திருத்தம் பற்றி பேச முடியாதவர்கள், ஆட்சியாளர்கள் செய்யும் சீர்திருத்தத்தை பற்றி பேசுவது வீணானது" என பதிலடி தந்தார்.

"ஆங்கிலேயர்களே இத்தேசத்திலிருந்து இராட்சிய பாரஞ் செய்வார்களாயின் சகல குடிகளும் சுகம் பெற வாழலாம் என்பார் பல வகுப்பார். இவற்றுள் ஒருவர் வாக்கு செல்லுமா, பலர் வாக்கு செல்லுமா என்பதை பகுத்தறிய வேண்டியதே பதமன்றி ஒருவெரண்ணத்தில் மற்றவரைக் கிணங்கச் செய்தல் இழிவேயாகும்"(1:93) என்று எழுதினார்.

37/ பண்டிதரின் .... சமூகநீதிக் கொள்கை