பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மார்லியின் யோசனைகள் மீதான வாதப் பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும், முஸ்லீம்களும், தலித்துகளும் நம்பிக்கையோடி ருந்தனர். ஆனால் முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது உறுதியாகி விட்டதுபோல் தெரிந்தது.

1908 ஆண்டு தேசிய காங்கிரஸ் மார்லியின் திட்டங்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தாலும், திலக் தலைமையிலான குழுவினர் இதை கடுமையாக எதிர்த்தனர். இந்த எதிர்ப்பிற்கு ஆதரவாகவே பார்ப்பன - பனியா இதழ்கள் எழுதிக் கொண்டிருந்தன. எனினும் நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முஸ்லிம் மற்றும் லீக் கடுமையாக முயற்சி செய்தனர்.

ஜனவரியில், முஸ்லீம் பிரதிநிதிகள் நேரடியாக மார்லியை லண்டனில் சந்தித்து தங்களுக்கு கூட்டு வாக்காளர் முறை வேண்டாமென்றும் தனி வாக்காளர் முறை மட்டுமே தேவையென்று வலியுறுத்தினர்.

முஸ்லீம் லீக் - காங்கிரஸ் இரண்டும் தத்தமது கோரிக்கைகளில் உறுதியாக இருந்து அதை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை முடுக்கிக் கொண்டு வந்த அதே நேரத்தில் அவை தலித் மக்களைப் பற்றியோ பிற ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியோ வழக்கம் போல எந்த கவலையும் படவில்லை, அந்த இரு இயக்கங்களின் நடுத்தர வர்க்கத்து தலைவர்கள் எல்லா வழிகளையும் கையாண்டார்கள், காங்கிரஸ் மாநாடு கூட்டி தமது ஆதரவை தெரிவித்ததென்றால், பதிலுக்கு முஸ்லீம்களும் அரசை ஆதரித்தார்கள். அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் பத்வாவை (புனிதப்போர்) அறிவித்தார்கள்.

ஹக்கிம் ரஸி-உத்-தின் மற்றும் மெளல்வி அப்துல் ஹக் (டெல்லி) ஆகியோர் பிரிட்டிஷ் அரசை ஆதரித்து பத்வாவை தயாரித்து அனைத்து மெளல்விகளுக்கும் அனுப்ப ஏறக்குறைய எல்லா மெளல்விக்களும் ஏற்றுக் கொண்டார்கள். அந்த பத்வாவில்.

- அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்டித்தும், இஸ்லாமியர்கள் அந்த போராட்டங்களிலிருந்து விலகியும் இருக்கிறார்கள்.

இஸ்லாம் இந்த போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல, கிறித்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் உள்ள ஒட்டுறவை கோருகிறது.

உலமாவாகிய நாங்கள், நம்முடைய மதத்தின் கோட்பாடுகளைபோலக் கருதி இந்த அரசுக்கு எதிராக நடைபெறும்

கௌதம சன்னா / 38