பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

இடஒதுக்கீடு எனும்

சமூகநீதிக் கொள்கை முகிழ்த்தது

மார்லியவர்கள் பிரதிநிதித்துவ ஏற்பாட்டை ஏற்றுக் கொள் வதால் கனம் கவர்னர் அவர்கள் அந்த ஏற்பாட்டை கீழ் வரும் இடங்களிலும் நிறைவேற்ற வேண்டும்: அவை -

ராஜாங்க ஆலோசனை சங்கங்கள், (Legislatives)

முனிசிபல் சங்கங்கள், (Municipalities)

இராஜாங்க உத்யோக சாலைகள், (Govtoffices)

இராணுவ வகுப்பு (Defence departments)

வைத்திய இலாக்காக்கள் (Health departments)

போலிஸ் இலாக்காக்கள்(Police departments)

இரயில்வே இலாக்காக்கள் (Railway departments)

கல்வி இலாக்காக்கள் (Educational Departments)

அந்தந்த இலாக்காவின் மொத்த தொகைபடிக்கு இவ்வகுப்பார் பிரிவினைபடி சேர்த்து விடுவார்களானால் சகல சாதியாரும் சீரும் சிறப்பும் அடைவார்கள்.

இந்த விகிதாச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் பின்வரும் விகிதாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும்.

இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் 100 பேரை நியமிப்பதானால்

41 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை