பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன்னுடைய திட்டத்தை பண்டிதர் மாற்றியமைக்கும்படி அந்த எதிர்ப்பு இருந்ததாகத் தெரிகிறது. அதுவும் ஒரு வாரத்திலேயே தன் ஆலோசனைகளை மாற்றியமைக்கும்படி அது இருந்தது. அதைப் பற்றி பண்டிதர் கூறும்போது

"நமது பத்திரிக்கையில் சென்றவாரம் எழுதியுள்ள ஆலோசனை சங்கத்தோர் தொகை நியமனத்தைப் பற்றி சில இந்துக்கள் விரோத சிந்தையால் துரற்றியதாகக் கேள்வியுற்று மிக்க விசனிக்கிறோம்."

சாதி வித்தியாசப் பிரிவினைகளும், சமய வித்தியாசப் பிரி வினைகளும் நிறைந்த இத்தேசத்தில் எடுத்த காரியத்தை ஒற்றுமையில் நடத்துவது மிக்க கஷ்டமேயாகும்." (1:06)

என்று தன் வருத்தத்தை கூறி பின் தன்னுடைய மாற்று ஆலோசனையை முன்வைத்தார்:

ஆலோசனை சங்கத்திற்கு 100 பேரை நியமிப்பதானால்

சாதிபேதமுள்ள இந்தியர் 20 பேர் 20%
சாதிபேதமில்லா பூர்வபெளத்தர்

எனும் சாதிபேதமில்லா திராவிடர்

20 பேர் 20%
மகமதியர் 20 பேர் 20%
யூரேஷியர் 20 பேர் 20%
இந்திய கிறித்தவர் 20 பேர் 20%
மொத்தம் 100 பேர் 100%

இப்படி நியமிப்பதானால் சகல குடிகளும் சுகம் பெறு வார்கள். மேலும் கமிஷன் நியமனத்தில் தெரிந்தெடுக்கும் கலாசாலைக்கு 500 பேரை நியமிப்பதானால் கீழ்கண்ட வகையில் நியமனம் இருக்க வேண்டும்.

43 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை