பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரபுக்களை தன் கருத்துக்கு இணங்க வைக்க செய்த முயற்சிக்கு கர்சன் பிரபு கடுமையாக சாடிப் பேசி மசோதாவை கடுமையாகக் குறை கூறி பேசியதோடு சபையின் கணிசமான ஆதரவை தம் பக்கம் ஈர்த்துக் கொண்டார். எனவே மசோதா கடுமையான எதிர்ப்பில் அவையில் இருந்தது.

இப்படி மசோதாவானது மார்லியின் திட்டப்படியே முன் வைக்கப் பட்டதானது முஸ்லிம் மற்றும் பிற பிரிவுகளிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. மார்லியை ஆதரித்து எழுதிவந்த பண்டிதர் தனது தொனியை மாற்றி எழுதினார். 1909 மார்ச் 3ம் நாள் தமிழனில் எழுதும் போது:

ஏழாவது எட்வர்ட் அவர்கள் அனைத்து சாதியினருக்கும் அவர்கள் கேட்டுக் கொண்டபடி பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனால் மார்லியவர்கள் அரசரின் ஆலோசனையை முற்றும் கவனிக்காத போக்காக இருக்கிறது என்று தனது வருத்தத்தை தெரிவித்ததுடன் நில்லாமல்,

"சக்ரவர்த்தியார் கருணை நிறைந்த அமுதவாக்கை லார்ட் மார்லியவர்கள் கவனியாமல் இந்து தேசத்திலிருந்து கமிஷன் விஷயமாக பல வகுப்பார் அனுப்பியிருக்கும் விண்ணப்பங்களை கருணை கொண்டு ஆலோசியாமலும், தனது விசாரணைக் கெட் டிய வரையில் இந்து தேசத்தில் வாசஞ் செய்பவர்கள் யாவரையும் இந்துக்கள் என்ற எண்ணம் கொண்டு நூதன சட்டங்களை நிரு பிக்க ஆரம்பித்துக் கொண்டார். அத்தகைய எண்ணம் கொண் டவர் இந்து தேசத்தில் வாசஞ் செய்யும் மகமதியர்களையும் இந்துக் களாக பாவிக்காது மகமதியர்கள் வேறு இந்துக்கள் வேறு என்று பிரிக்க ஆரம்பித்துக் கொண்டார். ஆனால் இந்துக்களுள் இடி பட்டு நசிந்து வரும் முக்கிய வகுப்பாரை கவனித்தாரில்லை. லார்ட் மார்லியவர்கள் இந்து தேசத்துள் வந்து இந்துக்களுடன் பழகி ஒவ்வொரு வகுப்பர்களின் குணா குணங்களையும் நன்கு ஆராய்ந்தி ருப்பாராயின் சாதிபேதம், சமயபேதம் பாஷைபேதம், குண பேதம் நிறைந்துள்ள இந்துக்களை பேதமற்றவர்கள் போலெண்ணி இந்துக்களில் ஒருவரை எக்சிகூட்டிவ் மெம்பரில் சேர்க்கலாம் என்னும் அவசர வாக்களித்திருக்கமாட்டார்.

ஈதன்றி கமிஷனென்று வெளிவந்த சட்டத்தை கொண்ட - எண்ணப்படி குறிப்பிடாமல் சாதிபேதம் நிறைந்துள்ளவர்கள் வசம்

45 / பண்டிதரின்- சமூகநீதிக் கொள்கை