பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

னும் பின்வந்த காலங்களில் பண்டிதரின் இந்த வரையறுப்பு படிதான் நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படி பண்டிதரின் பணிகள் வேகம் பிடித்திருந்த காலத்திலே தாழ்த்தப்பட்டோரின் பிற அமைப்புகளும் சமூக முன்னேற்றத்திற்கான பணிகளை செய்து வந்தன. இந்நிலையில் மார்லியின் அரசியல் சீர்திருத்தத்தில் பறையர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமென ரெட்டமலை சீனிவாசன் தொடங்கியிருந்த பறையர் மகாஜன சபையின் அங்கத்தினர்கள் தம்முடைய கோரிக்கைகளை எழுதி மனுவாக கவர்னருக்கும், இங்கிலாந்திலுள்ள அரசருக்கும், மார்லிக்கும் அனுப்பியிருந்தார்கள். இந்த செய்கை பண்டிதருக்கு மிகுந்த மனகஷ்டத்தை உண்டாக்கிவிட்டது. ஏனெனில் திராவிட மகாஜன சபை மூலம் கொடுத்த மனு மீதான விசாரணை நிலுவையிலிருந்து அதன்மீது சாதகமான பதிலை அரசர் தெரிவித்திருப்பது நடந்துள்ள நிலையில் இந்த மனுவானது தாழ்த்தப்பட்டோருக்குள் ஒற்றுமையில்லை என்பதாக தோற்றமளிக்கும் என கருதி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

"வீணே ஏழை குடிகளுக்குள் பிரிவினை உண்டு படுத்துவதுடன் இராஜாங்கத்தோடும் தங்கள் விண்ணப்பத்தைத் திருப்பியனுப்பும் வழியைத் தேடிக் கொள்ளாதிருக்க வேண்டுகிறோம்.

சாதிபேதமற்ற திராவிட மஹாஜன சபையோர் அனுப்பி யுள்ள விண்ணப்பத்தால் உண்டாவதும், உண்டாகப் போவதுமாகிய சுக பலன்களை தெரிந்துக் கொள்ள வேண்டியவர்கள். 1908 நவம்பர் 4ம் நாள் அரசர் ஏழாவது எட்வர்ட் இந்திய மன்னர் களுக்கு எழுதிய கடிதத்தில் எட்டாவது, ஒன்பதாவது வசனங்களைப் பாருங்கள் (1:ll4)

இந்த வேண்டுகோளை 1909ம் ஆண்டு மே மாதம் 26ம் நாள் தமிழனில் எழுதினார். ஆனால் இதழ் வெளிவருவதற்குள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காட்சிகள் மாறியிருந்தன. மக்களவையில் விவாதங்கள் முடிந்து மார்லி முன்வைத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு 1909 மே மாதம் 25ம் நாள் மசோதா சட்டமாக சட்டமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. சட்டத்தில் முக்கியமான அம்சங்கள் வருமாறு:

கவுன்சில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

தேர்தல் முறை ஏற்றுக் கொள்ளப்படும்.

வகுப்புகளின் நலன் கருதி தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

கௌதம சன்னா / 48