பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விட்டதுடன் தொடர்ந்து அமிதவாதிகளின் செல்வாக்கு ஓங்கி வந்தது. இடையில் மிண்டோ - மார்லி சீர்திருத்த நடவடிக்கைகளில் எல்லோர் கவனமும் இருந்தது மட்டுமின்றி எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றிவிட துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் லண்டனில் நிறைவேறிய மசோதாவானது இந்துக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு வழங்காததால் - எதிர்ப்பாளர்களின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த எதிர்ப்பு வட்டம் வளர்வது சமூகத்திற்கு ஆபத்தானது என்று பண்டிதர் கருதினார். எனவே அவர்களை ராணுவத்தைக் கொண்டு அடக்க வேண்டுமென கோரியதுடன்

"வங்காள கவுன்சிலில் ஒர் மிலிட்டரி அதிபதியை நியமிப்பதுடன், சென்னை, பம்பாய் ராஜதானி கவுன்சில்களிலும் ஒவ்வோர் மிலிட்டரி அதிபதிகளை நியமித்து ஆலோசினை சங்கங்களை வலுச் செய்ய வேண்டும்.

ஈதன்றி ஒவ்வோர் ராஜதானியிலும் பிரிகடியர் ஜெனரல்களும் ஜெனரல்களும் அவர்களுக்குப் போதுமான இராணுவ வீரர்களும் இருக்க வேண்டும்.

நூறு குடிகளைக் கெடுத்து தாங்கள் ஒரு குடி சுகமடையக்கோறும் சாதித் தலைவர்களின் கொடியச் செயல்களை அடக்கியாளுவதற்கு அறக் கருணையாம் செங்கோலுதவாது, மறக்கருணையாம் கொடுங்கோல் கிஞ்சித் திருந்தே தீரல் வேண்டும்." (1.1.59)

இந்துக்களின் மீதான எதிர்ப்பில் பண்டிதர் தீவிரமாக இருந்ததற்கு காரணத்தை விளக்கத் தேவையில்லை. இந்திய தேசிய போராட்ட வரலாற்றை உள்ளபடியே அறிந்த யாவரும் பண்டிதரின் கருத்துக்களுடன் உடன் படாமலிருக்க முடியாது. பண்டிதரின் எதிர்ப்புகளுக்கு அவரின் விகிதாச்சார கொள்கையும், சமூகநீதி கொள்கையும்தான் அடிப்படையானவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே பண்டிதர் மார்லியவர்கள் இந்தியாவிற்கு வந்து விசாரிணை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்ததோடு இட ஒதுக்கீடு கோரிக்கையையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

லண்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறிய பிறகு எதிர்ப்புகளை கணக்கில் கொண்ட அரசாங்கம், இனி இந்துக்கள் எனும் ஒற்றைப் பிரிவை ஏற்றுக் கொள்வதில்லை என முடிவு செய்து சகல

51 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை