பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மட்டிலும் சமரச சுதந்திரங் கொடுப்பதில்லையென்று கேட்பது நியாயமாகுமோ? (1:207)

பண்டிதர் தன் கருத்துக்களை முன் வைத்து வந்ததானது பெருத்த எதிர்ப்பை சம்பாதித்து கொண்டது. ஏற்கெனவே தேர்தல் முறை வேண்டாமென்றும், சகல சாதியாருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கோரியது கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகி இருந்தது. எனினும் தன் கருத்தில் பண்டிதர் உறுதியாக இருந்தார். இதற்கு பதில ளித்து 1909 டிசம்பர் 29ம் நாள் தமிழனில்

"சென்னை ராஜதானியில் ஐயர், முதலி, ராவ், செட்டி நாயுடு, பிள்ளை, நாயர், ரெட்டி எனும் வகுப்பாருள் ஒவ்வொரு வகுப்பினருள்ளும் நன்கு வாசித்தவர்களும், பட்டாதாரர்களும், பெருந்தொகையான வரி செலுத்துபவர்களும் இருக்கின்றபடியால் அந்தந்த வகுப்பாருள் விவேக மிகுந்த பெரியோர்களை கண்டெடுத்து கவுன்சில் மெம்பரிற் சேர்ப்பது சகல வகுப்பாருக்கும் சுகத்தை விளைவிப்பதுமன்றி அந்தந்த வகுப்பார்களுக்கு நேரிட்டுள்ள குறைகளையும் அகற்றி வாழ்வதற்கு ஆதாரமென்றுங் கூறியிருந்தோம்.

அவற்றை கண்ணுற்ற சுயப்பிரயோசன சோம்பேறிகள் அத்தகைய வகுப்பைப் பிரித்து ஒட்டு கொடுக்கப் படாதென்றும், சில மூடர்கள் அவ்வகையான அபிப்பிராயங் கொடுக்கின்றார்கள்.

இவ்வகை பிரிக்கலாகாதென்று கூறுவோர் பிரிக்கத்தக்க தொடர் மொழிகளாகும் ஐயர், முதலி செட்டி, நாயுடு, நாயர் என்னும் ஈற்றிலுள்ள சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு முத்துசாமி இராமசாமி, கோவிந்தன், கோபாலனென வழங்கி வருவாராயின் பிரிவினையாக்கும் யாதோர் வகுப்பும் இல்லையெனக் கருதி சகலரையும் இந்தியரென்றே கூறலாம்." (1:219)

இப்படி இந்துக்களை எதிர்த்ததோடு, தன் திட்டங்களுக்கு ஜனநாயகத் தன்மை வழங்கும் முயற்சியில் அணியமாக்கும் திட்டத்தில் மேலும் கூடுதலாக ஜைனர்களை சேர்த்தார். அவர்கள் அதுவரையில் அரசியல் கோரிக்கை ஏதும் முன் வைக்காமலிருந்ததை பண்டிதர் சுட்டிக் காட்டி அதே நாளிட்ட இதழில் எழுதினார்.

"இத்யாதி கவுன்சில் கூச்சலில் நமது ஜைன மத சோதிரர்கள் வெளித்தோன்றாமலிருப்பது மிக்க விசனமே. இத்தென்னிந்தியாவில் பூஸ்தியுள்ளவர்கள் அனந்தம் (நிறைய) பேரிருக்கின்

57 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை