பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முஸ்லீம்களுக்கான ஆதரவை மட்டும் இதில் பண்டிதர் முன் வைக்கவில்லை. அதே கண்டன பத்தியில்

"காங்கிரஸ் கூடும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு கனந்தங்கிய பரோடா ராஜனவர்கள் தீண்டப்படாதென்னும் ஆறுகோடி மக்கள் படும் அவமதிப்பையும், அவர்கள் முன்னேற வழியில்லா இடுக்கங்களையும் எடுத்தோதி முன்பு இவர்களை சீர் திருத்தும் வழிகளைத் தேடுங்கோளென்று கூறியுள்ளவற்றை தங்கள் காங்கிரஸ் கூட்டத்தில் எடுத்துப் பேசி ஆறுகோடி மக்களின் அல்லலை நீக்கும் வழி தேடியிருப்பார்கள்.

அத்தகைய பொதுநலமற்று சுயநலங் கருதுவோர்களாதலின் ஆறுகோடி ஏழைகளின் அவமதிப்பைக் கருதாது தங்கள் சுகங்களை மட்டும் மேலெனக் கருதி, மகமதியருக்கு கொடுத்துள்ள இரண்டு பேர் சுதந்திரத்தையும் மனஞ்சகியாது வீணே கூச்சலிட்டிருக்கிறார்கள்" (1:220)

பண்டிதர் தன் எதிர்ப்புகளையும், கருத்துக்களையும் தீவிரமாக முன்னிருத்திக் கொண்டிருந்த நேரத்தில் அரசின் போக்கில் புது மாறுதல் உண்டாகி இருந்தது. ஏற்கெனவே மிண்டோ - மார்லி திட்டப்படி வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை விரிவாக்கும் நோக்கில் யுரேஷியருக்கும், இந்திய கிறித்தவரும் 1910 ஜனவரியில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. இந்த பிரதிநிதித்துவம் நியமன அடிப்படையில் இருந்தது. இந்த நிகழ்ச்சி பண்டிதரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி போலத் தெரிந்தது. எனவே அவர் அதை வரவேற்றார். 1910 ஜனவரி 12ம் நாள் தமிழன் இதழில்,

"சென்னை ராஜதானியில் தற்காலம் ஆரம்பித்திருக்கும் ஆலோசினை சங்கத்தில் மகமதியருக்குள்ளும், இந்துக்களுக்குள்ளும் அங்கங்களை நியமித்ததுமின்றி யுரேஷியருக்குள் ஒருவரையும், சுதேச கிறித்தவருக்குள் ஒருவரையும் நியமித்துள்ளது கண்டு மிக்க ஆனந்தித்தோம் (1 :221)

யுரேஷியருக்கும், இந்திய கிறித்தவருக்கும் தம்முடைய ஆதரவை தெரிவித்ததுமில்லாமல், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தம்முடைய கோரிக்கையையும் அதில் சேர்த்து வலியுறுத்தினார். அதில்,

சில இங்கிலீஷ் துரைகளினால் சிலர் (தலித்) முன்னுக்கு வந்திருந்தார்கள். இப்போதும் சிலர் (தலித்) போதுமான கல்வி

59 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை